பாடல் #41949
உள்ளத்தை உமக்கென்று
🔤 Ullatthai Umakkenru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளத்தை உமக்கென்று திறந்தே - ஜெப உறவாலே உரையாடி மகிழ்வேன் - மகிழ்வேன். விருப்பங்கள் நிறைவேற வேண்டும் - என்று வீணான வேண்டல்கள் செய்யேன் வருத்தங்கள் மறைந்தோடச் செய்யும் - என்று விதமாக மன்றாடேன் என்றும். நீர்பேசும் நான் கேட்பேன் என்பேன் - என்று நெஞ்சத்தில் உம்வார்த்தை கொள்வேன் சீரான உம்சித்தம் கண்டே - அதைச் செய்தென்றும் உமைச் சார்ந்து வாழ்வேன். பிறருக்காய் வேண்டல்கள் புரிவேன் - உலகில் பலமாந்தர் நலமொன்றே நினைவேன் இறைவா நீர் என்வேண்டல் கேளும் - என்றும் என்மீட்பர் கிறிஸ்தேசு மூலம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullatthai Umakkenru Thiranthae - Jeba Uravaalae Uraiyaati Makizhvaen - Makizhvaen. Viruppanggal Niraivaera Vaentum - Enru Veenaana Vaendalkal Seyyaen Varutthanggal Marainthodach Seyyum - Enru Vidhamaaga Manraataen Enrum. Neerpaesum Naan Kaetpaen Enpaen - Enru Nenjjatthil Umvaartthai Kolvaen Seeraana Umsittham Kantae - Athaich Seythenrum Umaich Saarnthu Vaazhvaen. Pirarukkaay Vaendalkal Purivaen - Ulakil Palamaandhar Nalamonrae Ninaivaen Iraivaa Neer Envaendal Kaelum - Enrum Enmeetpar Kiristhaesu Moolam.