பாடல் #41946
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
ஆர்ப்பரிப்போம்! ஆரவாரிப்போம்!! மீட்பர் இயேசு வருகின்றாரே - இன்று - ஆர்ப் பூரிப்பான எக்காளங்கள் பூமியின் மேலே முழங்கிடுதே - இன்று - ஆர்ப் புத்தியுள்ள கன்னியர் போல் முத்தியை நோக்கி நடந்திடுவோம் சத்தம் கேட்கும் காலம் வரும் நித்திய வீட்டுக்குள் நுழைத்திடு வோம் - இன்று - ஆர்ப் யுத்தம் வரும் சத்தம் வரும் நித்தம் நிலமும் நடுங்கிடுமே பக்தியற் றோரை பிரித் திடுவார் நித்திய அக்கினியில் அழித்திடுவார் - இன்று - ஆர்ப் அந்தியிலோ பிறசந்தியிலோ முந்திய நடுசாமத்திலோ வந்திடுவார் உனைசந்தித்திடுவார் பிந்திடாமல் பின் சென்றிடுவோம் - இன்று - ஆர்ப்