பாடல் #41944
உயர்ந்த மேன்மை உதறித்தள்ளி
🔤 Uyarndha Maenmai Udharitthalli
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்ந்த மேன்மை உதறித்தள்ளி உலகில் வந்தீரய்யா - இயேசய்யா உறவு தந்தீரய்யா - இயேசய்யா உயர்வு தந்தீரய்யா முழுக்க இறைமை ததும்பும் நிலையை முழுதும் துறந்ததென்ன! அழுக்கு மண்ணால் நிரப்பும் தொழுவம் இதிலே தவழும் அழகென்ன! - உயர்ந்த தூய விண்ணின் தூய சூழல் துறந்த அன்பென்ன! ஆயக்காரர் பாவிகளுடன் அடுத்துப் பழகும் அழகென்ன! - உயர்ந்த தந்த உறவு எங்கள் உயர்வு சொந்தப் பொருளல்ல இந்த உறவை எவர்க்கும் அருள எமக்கு என்றும் அருள் செய்வீர்! - உயர்ந்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyarndha Maenmai Udharitthalli Ulakil Vantheerayyaa - Yesayyaa Uravu Thantheerayyaa - Yesayyaa Uyarvu Thantheerayyaa Muzhukka Iraimai Thathumpum Nilaiyai Muzhuthum Thurandhathenna! Azhukku Mannaal Nirappum Thozhuvam Ithilae Thavazhum Azhakenna! - Uyarndha Thooya Vinnin Thooya Soozhal Thurandha Anpenna! Aayakkaarar Paavigaludan Atutthup Pazhakum Azhakenna! - Uyarndha Thandha Uravu Enggal Uyarvu Sondhap Porulalla Indha Uravai Evarkkum Arula Emakku Enrum Arul Seyveer! - Uyarndha