பாடல் #41943
புனித நன்னாளிதுவே
🔤 Punidha Nannaalithuvae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புனித நன்னாளிதுவே புனித நன்னாளிதுவே பூரித்துப் பாடிடுவோம் ... பரனைப் பூரித்துப் பாடிடுவோம் மனித உருவிலே மாதேவ மைந்தர் மேதினி வந்த தின்னாள் ... இயேசு மேதினி வந்த தின்னாள் ... புனித அருமைகள் பெருமைகள் அளவில்லா மேன்மைகள் அனைத்தையும் அவர் துறந்தே வெறுமைக் கோலத்தோடு வேலையாளைப் போல் விரைந்திங்கு வந்த நன்னாள் ... மீட்பர் விரைந்திங்கு வந்த நன்னாள் ... புனித எல்லோரும் ஈடேற இருளெங்கும் மறைந்தோட ஏற்றமெல்லாம் வரவே கல்வாரிச் சிலுவையைக் கருத்தினில் வைத்தே கர்த்தர் பிறந்த பொன்னாள் ... இன்று கர்த்தர் பிறந்த பொன்னாள் ... புனித இறைவனார் தந்திட்ட இணையிலா ஈவாக இயேசுபிரான் வந்ததால் தரையுள்ளோர் யாவரும் துதிபாடி மகிழவே தினம் தினம் இரட்சண்ய நாள் ... இங்குத் தினம் தினம் இரட்சண்ய நாள் ... புனித
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Punidha Nannaalithuvae Punidha Nannaalithuvae Pooritthup Paatituvom ... Paranaip Pooritthup Paatituvom Manidha Uruvilae Maathaeva Maindhar Maethini Vandha Thinnaal ... Yesu Maethini Vandha Thinnaal ... Punidha Arumaigal Perumaigal Alavillaa Maenmaigal Anaitthaiyum Avar Thuranthae Verumaik Kolatthotu Vaelaiyaalaip Pol Virainthingku Vandha Nannaal ... Meetpar Virainthingku Vandha Nannaal ... Punidha Ellorum Eetaera Irulengkum Marainthoda Aertramellaam Varavae Kalvaarich Siluvaiyaik Karutthinil Vaitthae Kartthar Pirandha Ponnaal ... Inru Kartthar Pirandha Ponnaal ... Punidha Iraivanaar Thanthitta Inaiyilaa Eevaaga Yesupiraan Vandhathaal Tharaiyullor Yaavarum Thuthipaati Makizhavae Thinam Thinam Iratsanya Naal ... Ingkuth Thinam Thinam Iratsanya Naal ... Punidha