பாடல் #41942
வருகின்றார் இறைவன்
🔤 Varukinraar Iraivan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருகின்றார் - இறைவன் - வருகின்றார் வான்புவி படைத்த வல்லவன் இறைவன் வாழ்வதின் ஊற்றாம் விண்ணவன் இறைவன் வரலாற்றின் அகரத்தையே வகுத்தவர் அவரே வரலாற்றில் மானிடனாய் வந்தவர் அவரே வரலாற்றின் போக்கை மாற்றி அமைப்பவர் அவரே வரலாற்றில் புதுமைதனை வடிப்பவர் அவரே இல்லறத்தை நல்லறமாய் இணைப்பவர் அவரே அல்லல் உறும் வேளை வந்து அணைப்பவர் அவரே எல்லையில்லா அமைதிதனை அளிப்பவர் அவரே இல்லம் வரும் இளையவனை ஏற்பவர் அவரே உரிமையுடன் ஆட்கொள்ளும் உத்தமர் அவரே பிரிவினையாம் சுவர்களையே தகர்ப்பவர் அவரே நிறைவான ஒளி வாழ்வைத் தருபவர் அவரே மறைவான ஏழை உருவில் வருபவர் அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varukinraar - Iraivan - Varukinraar Vaanpuvi Pataittha Vallavan Iraivan Vaazhvathin Oorraam Vinnavan Iraivan Varalaarrin Agaratthaiyae Vakutthavar Avarae Varalaarril Maanidanaay Vandhavar Avarae Varalaarrin Pokkai Maarri Amaippavar Avarae Varalaarril Puthumaidhanai Vatippavar Avarae Illaratthai Nallaramaay Inaippavar Avarae Allal Urum Vaelai Vanthu Anaippavar Avarae Ellaiyillaa Amaithidhanai Alippavar Avarae Illam Varum Ilaiyavanai Aerpavar Avarae Urimaiyudan Aatkollum Utthamar Avarae Pirivinaiyaam Suvarkalaiyae Thakarppavar Avarae Niraivaana Oli Vaazhvaith Tharubavar Avarae Maraivaana Aezhai Uruvil Varubavar Avarae