பாடல் #41940
மனம் இசைந்து அனைவரும்
🔤 Manam Isainthu Anaivarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் இசைந்து அனைவரும் உடன்பிறப்பாய் தினம் வாழ்வது சிறப்பானது! நன்மையானது இன்பமானது மண்வாழ்வினில் பேரழகு! 1 அது- ஆரோனின் தலைமீது பொழிந்து அவனது தாடியில் வழிந்து அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து - கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது! 2 அது- எர்மோனின் மலையதன் மேலும் சீயோனின் சிகரங்கள் மீதும் மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து - தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது! 3 இன்று- இனம்மொழி பொருள்நிலைக் கொண்டு எத்தனைப் பிரிவுகள் உண்டு? அன்பினில் பகிர்ந்து இன்பமாய் இணைந்து - ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Isainthu Anaivarum Udanpirappaay Thinam Vaazhvathu Sirappaanathu! Nanmaiyaanathu Inbamaanathu Manvaazhvinil Paerazhaku! 1 Athu- Aaronin Thalaimeethu Pozhinthu Avanathu Thaatiyil Vazhinthu Angkiyil Kuzhainthu Thonggalil Izhainthu - Keezh Vatinthitum Parimalam Pondrathu! 2 Athu- Ermonin Malaiyathan Maelum Seeyonin Sigaranggal Meethum Mellenak Kavinthu Sillenak Kuvinthu - Thinam Patarnthitum Paniyinaip Pondrathu! 3 Inru- Inammozhi Porulnilaik Kontu Etthanaip Pirivugal Untu? Anpinil Pakirnthu Inbamaay Inainthu - Onraay Inainthu Vaazhvathae Arularasu!