பாடல் #41938
ஆவியை அனுப்பும்
🔤 Aaviyai Anuppum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியை அனுப்பும் ஐயா - அடியார்க்கும தாடியை அனுப்பும் ஐயா, கூவியழைக்கும் எங்கள் குறைகள் அனைத்தும் போக மேவி இவ்விடம் வந்தெம் மீது கருணையாக - ஆவியை தாகமுள்ளவருக்கு - ஜீவத்தண்ணீரைத் தருவேன் என்று சொன்னீரே! தாகம் தீர இனித் தாகமே இல்லாமல் வேகமாய் இதயத்தில் ஜீவ நதிகள் ஓட - ஆவியை உலர்ந்த எலும்புகள் மேல் - உமதாவியை ஊதியருளுமையா கலகத்துப் போனோம் காய்ந்தே உலர்ந்து போனோம் பலனேதுமேயிலாத பாலைவனமே யானோம் - ஆவியை கல்லறைகளிலிருந்து - கட்டோடு நாங்கள் கண் விழித் தெழுந்திடவே அல்லேலூயா சொல்லி ஆர்ப்பரித்து முழங்க நல்ல சுவிசேடத்தை நாடெங்கிலும் வழங்க - ஆவியை உயிர்ப்பிக்க மாட்டீரோ - மீளவும் எம்மை உருவாக்க மாட்டீரோ? உயிருள்ள சபையாக உலகினிலே விளங்கப் பயிர்மீது மழை பெய்த பாங்கினைப் போலவே - ஆவியை அன்பு பொறுமையில்லையே - ஆவியைப் பெற்ற அருமை சிறிதும் இல்லையே இன்பத் திருமறைதான் எடுத்தே இயம்புகின்ற ஏழும் எமது நெஞ்சில் இடம் பெறவும் இல்லையே - ஆவியை ஆதித் திருச்சபைக்கே - எங்களை மீண்டும் அழைத்துச் செல்ல மாட்டீரோ? வீதியெங்கும் உமதன்பையே விளைத்திடும் வினைகளையே செய்ய வரந்தரமாட்டீரோ? - ஆவியை எங்களை நொறுக்கும் ஐயா - ஏசையாநீர் எங்களை உருக்குமையா! தங்க முகச் சாயல் தங்கும் வரையுருக்கி இங்கித உருவாக்கி இதயத்தில் ஒளி செய்யும் - ஆவியை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyai Anuppum Aiyaa - Atiyaarkkuma Thaatiyai Anuppum Aiyaa, Kooviyazhaikkum Enggal Kuraigal Anaitthum Poga Maevi Ivvidam Vanthem Meethu Karunaiyaaga - Aaviyai Thaagamullavarukku - Jeevatthanneeraith Tharuvaen Enru Sonneerae! Thaagam Theera Inith Thaagamae Illaamal Vaegamaay Idhayatthil Jeeva Nathigal Oda - Aaviyai Ularndha Elumpugal Mael - Umathaaviyai Oothiyarulumaiyaa Kalakatthup Ponom Kaaynthae Ularnthu Ponom Palanaethumaeyilaadha Paalaivanamae Yaanom - Aaviyai Kallaraigalilirunthu - Kattotu Naanggal Kan Vizhith Thezhunthidavae Allaelooyaa Solli Aarpparitthu Muzhangga Nalla Suvisaedatthai Naatengkilum Vazhangga - Aaviyai Uyirppikka Maatteero - Meelavum Emmai Uruvaakka Maatteero? Uyirulla Sapaiyaaga Ulakinilae Vilanggap Payirmeethu Mazhai Peytha Paangkinaip Polavae - Aaviyai Anpu Porumaiyillaiyae - Aaviyaip Pertra Arumai Sirithum Illaiyae Inbath Thirumaraithaan Etutthae Iyampukindra Aezhum Emathu Nenjsil Idam Peravum Illaiyae - Aaviyai Aathith Thirucchapaikkae - Enggalai Meentum Azhaitthuch Sella Maatteero? Veethiyengkum Umathanpaiyae Vilaitthitum Vinaigalaiyae Seyya Varandharamaatteero? - Aaviyai Enggalai Norukkum Aiyaa - Aesaiyaaneer Enggalai Urukkumaiyaa! Thangga Mugach Saayal Thangkum Varaiyurukki Ingkidha Uruvaakki Idhayatthil Oli Seyyum - Aaviyai