பாடல் #41937
ஆவியின் வரங்களை அறிந்திடுவோம்
🔤 Aaviyin Varanggalai Arinthituvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியின் வரங்களை அறிந்திடுவோம் ஆண்டவர் வழிகளில் நடந்திடுவோம் இயேசுவை ஆண்டவர் என ஏற்போர் மாசற ஆவியின் அருள்பெற்றோர் - அவர் தாசராய் வாழ்ந்திட துணிந்திடுவார் பாசமாய் என்றுமே பணிபுரிவார் வரங்களில் பற்பல வகை உண்டு பரமனே அவரவர்க் களிப்பதுண்டு - என்றும் திறமுடன் அவைகளை வாழ்வினிலே பிறர் நலம் கருதியே பேணிடவே யாவிலும் சிறந்த நல் வழியறிவோம் பாரினில் அதுவே அன்பென்போம் - அது சாவினைச் சிலுவையில் வென்றதுவே சாவிலும் அழிந்திடாப் பண்பதுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyin Varanggalai Arinthituvom Aandavar Vazhigalil Natanthituvom Yesuvai Aandavar Ena Aerpor Maasara Aaviyin Arulperror - Avar Thaasaraay Vaazhnthida Thuninthituvaar Paasamaay Enrumae Panipurivaar Varanggalil Parpala Vakai Untu Paramanae Avaravark Kalippathuntu - Enrum Thiramudan Avaigalai Vaazhvinilae Pirar Nalam Karuthiyae Paenidavae Yaavilum Sirandha Nal Vazhiyarivom Paarinil Athuvae Anpenpom - Athu Saavinaich Siluvaiyil Vendrathuvae Saavilum Azhinthitaap Panpathuvae