பாடல் #41935
வாழ்விது என மகிழும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
வாழ்விது என மகிழும் மரணங்களில் - மெய் வாழ்வெது! நித்திய வாழ்வும் எது? வாய்த்தத் தலைவர்களின் ஏய்ப்பினிலே - மெய் மேய்ப்பனாய் திகழும் மேன்மை அது புரிந்திடா கூச்சலின் வெறுமையிலே - ஞானம் புகன்றிடும் புண்ணிய வார்த்தை அது அறிஞர் தம் கூட்டத்தின் மடமையிலே - மெய் அறிவதாய் திகழும் ஞானம் அது! ஒளிகளில் கரந்திடும் இருளினிலே - மெய் வழியினை காட்டிடும் ஒளி தான் அது உணவு பதுக்கல்களின் பசியினிலே - மெய் உயிர் தரும் வானக உணவு அது