பாடல் #41934
ஏசுவுக்கு உவமை சொல்ல
🔤 Aesuvukku Uvamai Solla
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுவுக்கு உவமை சொல்ல எவருமில்லையே! கிறிஸ்தேசுவுக்கு தேசுலாவும் தெய்வீகத்திலே மாசிலாத வாழ்வுதனிலே - கிறிஸ்தேசு அரண்மனையில் பிறந்திடாமல் அகன்ற மாண்பிலே - (ஒரு அரண்மனையில்) அருகிலிருந்து குடிசையொன்றிலே அடியெடுத்து வைத்ததிலே - கிறிஸ்தேசு குஷ்டரோகி நிலைமைகண்டு குழைந்த மாண்பிலே - (படுகுஷ்டரோகி..) துஷ்டர்களையே துரத்திடாமல் தூய வாழ்வு செய்ததிலே - கிறிஸ்தேசு ஏழையோடு ஏழையாய் குழையும் அன்பிலே - (மிக..) பாழடைந்த இருண்டவாழ்வில் பகலொளி தருவதிலே - கிறிஸ்தேசு சிலுவை மீது உயிர்கொடுத்து சிறந்த மாண்பிலே - (ஒரு சிலுவையின் மீது) உலகுவாழ உயிர்தெழுந்து உய்யக்கொண்ட உண்மைதனிலே - கிறிஸ்தேசு வழியும் நானே சத்தியம் நானே வாழ்வு தான் நானே - தனி பழியிலாத வழியில் சென்று பிழைப்பீரென்று சொல்லிச் சென்ற - கிறிஸ்தேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuvukku Uvamai Solla Evarumillaiyae! Kiristhaesuvukku Thaesulaavum Theyveegatthilae Maasilaadha Vaazhvudhanilae - Kiristhaesu Aranmanaiyil Piranthitaamal Agandra Maanpilae - (oru Aranmanaiyil) Arukilirunthu Kutisaiyonrilae Atiyetutthu Vaitthathilae - Kiristhaesu Kushtaroki Nilaimaigantu Kuzhaindha Maanpilae - (patukushtaroki..) Thushtarkalaiyae Thuratthitaamal Thooya Vaazhvu Seythathilae - Kiristhaesu Aezhaiyotu Aezhaiyaay Kuzhaiyum Anpilae - (miga..) Paazhataindha Irundavaazhvil Pakaloli Tharuvathilae - Kiristhaesu Siluvai Meethu Uyirkotutthu Sirandha Maanpilae - (oru Siluvaiyin Meethu) Ulakuvaazha Uyirthezhunthu Uyyakkonda Unmaidhanilae - Kiristhaesu Vazhiyum Naanae Satthiyam Naanae Vaazhvu Thaan Naanae - Thani Pazhiyilaadha Vazhiyil Senru Pizhaippeerenru Sollich Sendra - Kiristhaesu