பாடல் #41931
ஒப்பிலா மெய்ப் பொருளே!
🔤 Oppilaa Meyp Porulae!
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1 ஒப்பிலா மெய்ப் பொருளே! உன்னதக் கடவுளே! எப்படி உம்மைப் போற்றுவேன்- என் நாவினால் எப்படி உம்மைப் போற்றுவேன் மெய்ஞ்ஞான மணியே மோன வொளியே! வானோர் பணியே! நானோ யெளியன்! - ஒப் 2 நீரே எனைப் படைத்தோர் எனைப் பாதுகாத்தவர் சேயே உமக்கு நானையா - நசரேசையா! சேயே உமக்கு நானையா கொடும் பேயு மாய புவியு மென்றன் காயமு நழன்றெனை கலக்க நொந்தேன். - ஒப் 3 நொந்து வந்தேனே உள்ளம் நொந்து வந்தேனையா சொந்தம் பாராட்டி மேசையா! - நசரேசையா! சொந்தம் பாராட்டி மேசையா! பந்தப் பாசமறவுல் லாசங் கெடவே நீச வுலகி னாசை விடவே. - ஒப் 4 அப்பனைப் போலதட்டி அன்னையைப் போலணைத்து எப்படி யேனு மேசையா - கிறிஸ்தேசையா எப்படி யேனு மேசையா உனை நாடிட கவிபாடிட வினை ஓடிட கதிகூடிட வருள். - ஒப்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1 Oppilaa Meyp Porulae! Unnathak Katavulae! Eppati Ummaip Porruvaen- En Naavinaal Eppati Ummaip Porruvaen Meynjnjaana Maniyae Mona Voliyae! Vaanor Paniyae! Naano Yeliyan! - Op 2 Neerae Enaip Pataitthor Enaip Paathukaatthavar Saeyae Umakku Naanaiyaa - Nasaraesaiyaa! Saeyae Umakku Naanaiyaa Kotum Paeyu Maaya Puviyu Mendran Kaayamu Nazhanrenai Kalakka Nonthaen. - Op 3 Nonthu Vanthaenae Ullam Nonthu Vanthaenaiyaa Sondham Paaraatti Maesaiyaa! - Nasaraesaiyaa! Sondham Paaraatti Maesaiyaa! Pandhap Paasamaravul Laasang Kedavae Neesa Vulaki Naasai Vidavae. - Op 4 Appanaip Polathatti Annaiyaip Polanaitthu Eppati Yaenu Maesaiyaa - Kiristhaesaiyaa Eppati Yaenu Maesaiyaa Unai Naatida Kavipaatida Vinai Otida Kathikootida Varul. - Op