பாடல் #41930
இசைப்பாடல் பல பாடியே - பர
🔤 Isaippaadal Pala Paatiyae - Para
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இசைப்பாடல் பல பாடியே - பர வசத்தாலே உனை நாடுவார்! - அடியார் திசையெங்கும் உன் பாசுரம்! - வாய் அசைப்பெல்லாம் அருள் வாசகம் - அன்றோ! 1. பலபண்கள் கனிந்தூறுமே - அம் பலம்தோறும் அவையேறுமே!- வேய்ங் குழல் யாழும் உனைப் போற்றுமே - தீங் குழல்வோரின் மனம் மாற்றுமே - நன்றே - இசை 2. கவிதாவீ துடை கீதங்கள் - அருள் கவினோங்கும் மறை தீபங்கள்! - மா மரியாளின் துதிப் பாடலும் - நன் முறைபாடி அவர் ஆடுவார் - எனறும் - இசை 3 அடியார் களுடன் பாடுவேன் - சிறு அடியேனும் அவர் போலவே! - திரு வடிநாடும் திரள் பேருடன் - அருள் வடிவான் உனை நாளுமே - நன்றே - இசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isaippaadal Pala Paatiyae - Para Vasatthaalae Unai Naatuvaar! - Atiyaar Thisaiyengkum Un Paasuram! - Vaay Asaippellaam Arul Vaasakam - Anro! 1. Palapankal Kaninthoorumae - Am Palamthorum Avaiyaerumae!- Vaeyng Kuzhal Yaazhum Unaip Porrumae - Theeng Kuzhalvorin Manam Maarrumae - Nanrae - Isai 2. Kavithaavee Thutai Keedhanggal - Arul Kavinongkum Marai Theebanggal! - Maa Mariyaalin Thuthip Paadalum - Nan Muraipaati Avar Aatuvaar - Enarum - Isai 3 Atiyaar Kaludan Paatuvaen - Siru Atiyaenum Avar Polavae! - Thiru Vatinaatum Thiral Paerudan - Arul Vativaan Unai Naalumae - Nanrae - Isai