பாடல் #41929
ஏசுவைத் துதியுங்கள் - கிறிஸ்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
ஏசுவைத் துதியுங்கள் - கிறிஸ் தேசுவைத் துதியுங்கள் ஏழிசையாலே இசைத் தமிழாலே வாழியவென்று வாழ்த்துவதாலே - ஏசுவை பொன்னொளியாக விண்வெளி எங்கும் மின்னிடும் மீன்களே மிக உலகங்களே மன்னிடும் நதிகளே மலைகளே கடல்களே பன்னிற மலர்களே பலவகை உயிர்களே! - ஏசுவை பலப்பல மொழிபேசிப் பலப்பல வகையாக உலகினில் நாளும் உழைக்கிற நண்பர்களே கலைஞர்களே தமிழ்க் கவிஞர்களே உயர் தலைவர்களே வயல் உழவர்களே மிக! - ஏசுவை விண்வெளிதனையே தன்வெளியாகவே கொண்ட வரும் நடு நின்றவரும் அவர் மண்ணுலகாமிதை விண்ணுலகாக்கிட நண்ணுபவர் அவர் நாயகரும் அவர்! - ஏசுவை