பாடல் #41927
தடம் மாறிப் போனேன்
🔤 Thatam Maarip Ponaen
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில். இடறி விழுந்தேனே நான், சேற்றில். கரையேற வலுவும் இல்லை. பலமுறை முயன்றும் வீழ்ந்தேன். வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். 1. பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன். அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன். - 2 மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி, நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி தந்தீரே . பாதையில் ஒளி தந்தீரே. 2. வெளிவேஷமாய், உள்ளே பாவமாய், வெள்ளை நிற கல்லறை ஆனேன். அகங்காரமாய், ராஜராஜனை உள்ளம் நொறுங்கிட நான் நிந்தித்தேன்.- 2 படுபாதகன், என்னை மன்னித்து தாயைப் போல் தாங்கி பிடித்து, இந்தப் பாவியை நல்ல மேய்ப்பராய், தயவாய் மந்தையில் சேர்த்தீரே. தயவாய் மந்தையில் சேர்த்தீரே. தடம் மாறிப் போனேன் ஓர் நாளில். கதறி அழுதேனே பாவ சேற்றில். கரையேற்ற தேவனே வந்தார். புடமிட்டு பொன் மனம் தந்தார். பாவி எனக்காய் தாழ்வில் வந்தாரே. என் வாழ்க்கை துளிர்க்க தன்னை தந்தாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thatam Maarip Ponaen Or Naalil. Idari Vizhunthaenae Naan, Saerril. Karaiyaera Valuvum Illai. Palamurai Muyanrum Veezhnthaen. Vaazhvai Tholaitthu Saavai Thaetinaen. En Vaazhvai Tholaitthu Saavai Thaetinaen. 1. Perumpaaviyaay, Netungkaalamaay, Ummai Vittu Naan Otipponaen. Azhakeenamaay, Pelaveenanaay, Ummil Thirumpida Naan Naaninaen. - 2 Mazhai Saaralaay, Ilam Thendralaay Ennai Undhan Anpaal Varuti, Nilavoliyaay, Pakalavanaay Paathaiyil Oli Thantheerae . Paathaiyil Oli Thantheerae. 2. Velivaeshamaay, Ullae Paavamaay, Vellai Nira Kallarai Aanaen. Agangkaaramaay, Raajaraajanai Ullam Norungkida Naan Ninthitthaen.- 2 Patupaadhakan, Ennai Mannitthu Thaayaip Pol Thaangki Pititthu, Indhap Paaviyai Nalla Maeypparaay, Thayavaay Manthaiyil Saerttheerae. Thayavaay Manthaiyil Saerttheerae. Thatam Maarip Ponaen Or Naalil. Kathari Azhuthaenae Paava Saerril. Karaiyaertra Devanae Vanthaar. Pudamittu Pon Manam Thanthaar. Paavi Enakkaay Thaazhvil Vanthaarae. En Vaazhkkai Thulirkka Thannai Thanthaarae.