பாடல் #41904
மகிமை நிறைந்தவரே யெகோவா தெய்வமே
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
மகிமை நிறைந்தவரே யெகோவா தெய்வமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 பொன்னோடும் பொருளோடும் புறப்பட செய்தவரே -2 செங்கடலில் வழி திறந்து பாதை உருவாக்கினீரே -2 ஐந்தப்பம் ரெண்டு மீனை ஆயிரமாய் பெருக செய்தீர் -2 அண்டின யாவருக்கும் வயிறார உணவளித்தீர் -2 காகத்தைக் கொண்டு நீரும் எலியாவை போசித்தீரே -2 வரட்சியின் காலத்திலும் என்னை மாவு குறையா காத்தீர்-2 பாவத்தை சாபத்தை உம் ரத்தத்தால் தீர்த்து விட்டீர் -2 நித்திய ஜீவனையும் எங்களுக்கு தந்து விட்டீர்-2 வானத்து மன்னவால் போசித்து காத்தவரே -2 இன்றைய நாளிலும் உணவு உடை தந்தவரே-2