பாடல் #419
ஆத்துமாக்கள் மேய்ப்பரே
🔤 Aatthumaakkal Maeypparae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும், நாசமோசம் இன்றியே காரும், நல்ல மேய்ப்பரே. பணம் ஒன்றே ஆசிக்கும் கூலியாளோ ஓடுவோன்; காவல் இன்றிக் கிடக்கும் தொழுவத்தின் வாசல்தான்; வாசல், காவல் ஆன நீர் மந்தைமுன் நின்றருள்வீர். கெட்டுப்போன யூதாஸின் ஸ்தானத்திற்குத் தேவரீர், சீஷர் சீட்டுப்போடவே மத்தியா நியமித்தீர்; எங்கள் ஐயம் யாவிலும், கர்த்தரே, நடத்திடும். புது சீயோன் நகரில் பக்தர் வரிசையிலே நிற்கும் மத்தியாவோடும் நாங்கள் சேரச் செய்யுமே கண் குளிர உம்மையும் காணும் பாக்கியம் அருளும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaakkal Maeypparae, Manthaiyaip Patsikkavum Saatthaan Paayum Onaay Pol Kittichsaerum Naeramum, Naasamosam Inriyae Kaarum, Nalla Maeypparae. Panam Onrae Aasikkum Kooliyaalo Otuvon; Kaaval Inrik Kidakkum Thozhuvatthin Vaasalthaan; Vaasal, Kaaval Aana Neer Manthaimun Nindrarulveer. Kettuppona Yoothaasin Sthaanatthirkuth Thaevareer, Seeshar Seettuppodavae Matthiyaa Niyamittheer; Enggal Aiyam Yaavilum, Karttharae, Natatthitum. Puthu Seeyon Nakaril Pakthar Varisaiyilae Nirkum Matthiyaavotum Naanggal Saerach Seyyumae Kan Kulira Ummaiyum Kaanum Paakkiyam Arulum.