பாடல் #41889
நீர் வந்த நேரம் மேகங்கள்
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
Scale: Em
🎸 Chords Available
நீர் வந்த நேரம் மேகங்கள் கூட்டம் மழைச்சாரல் கொட்டும் மண்வாசமே நீர் வந்த நேரம் விண்மீன்கள் கூட்டம் வெட்கத்தில் மறையும் விடியல் வரும் நீர் வந்த நேரம் சூரியன் தளர பிறைத்தேடும் நிலவு குளிர் வீசுமே உயிரே உயிரே என் இயேசுவே இமைப்பொழுதும் பிரியாத பேசும் உயிரே நினைத்திடும் நேரத்தில் நாடி நரம்பனைத்திலும் பாய்ந்தோடுதே உம் நினைவே பனி பெய்யும் இரவில் நடுங்கிடும் குளிரில் பிளவுண்ட மலையாய் நீர் வந்தீரே புயல் வீசும் கடலில் பாய்ந்திடும் அலையில் உயிர் காக்கும் படகாய் நீர் வந்தீரே கலங்கரை தீபம் போல் வழிகாட்டும் ஒளியே கண்ணிமைக்கும் நேரத்தில் கரைசேர்த்தீரே கோரமம் சீற்றத்தில் நங்கூரமாய் நீர் வந்தீரே காயங்கள் கண்ட என் ரணமான மனதை குணமாக்கும் மருந்தாய் நீர் வந்தீரே கண்முன்னே நின்ற என் கனமான நினைவை லகுவாக மாற்ற நீர் வந்தீரே என்னுள்ளே ஏதோ அனல் பாயும் உணர்வும் மெய்சிலிர்க்கும் மகிழ்ச்சியும் நீர் தந்தீரே துன்பமாம் வாழ்வினில் இன்பராக நீர் வந்தீரே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em D Em Em D D Am G D Am G Em Am Em D Em Am Em G Em D Em D Em G Em G D G Em G D A G A Em A G A Em A G Em