பாடல் #41886
புதிது புதிது உந்தன் இரக்கம்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
புதிது புதிது உந்தன் இரக்கம் காலைதோறும் புதிது ஒவ்வொரு நாளும் புதிது – 2 1. முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம் விலகி போகாதது உந்தன் மாகிருபை விலகாத கிருபை மாறாத அன்பு கர்த்தர் நல்லவர் – என் உம் கிருபை என்றுமுள்ளது – 2 2. கர்த்தரே என் சுதந்தரம் என்று நான் சொல்லுவேன் – 2 நீரே என் உரிமைச் சொத்து உம்மையே நம்பியுள்ளேன் 3. தேடும் அனைவருக்கும் நன்மைகள் செய்பவரே – 2 நம்பி நான் காத்திருக்கின்றேன். எழுப்புதல் காணும் வரை