பாடல் #41862
நீ என்னால் மறக்கப்படுவதில்லை
🔤 Nee Ennaal Marakkappatuvathillai
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ என்னால் மறக்கப்படுவதில்லை
உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
எந்தன் கையில் இராஜ முடி நீயே
எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2
என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை-2
1. கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2
தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
பாலகனை மறப்பாளோ
அவள் மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே
- என் சீயோனே
2. நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-2
வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே-2
- என் சீயோனே
3. எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு-2
அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
இனி நீ தீங்கை காண்பதில்லையே-2
- என் சீயோனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Ennaal Marakkappatuvathillai
Unnai Enrum Kaividavae Maattaen
Ullangkaiyil Unnai Varainthaenae
Endhan Kaiyil Iraaja Muti Neeyae
Endhan Karatthil Alangkaara Kireedam
En Seeyonae Seeyonae
Unnai Marappaeno Marappathillai-2
En Kaiyil Irunthu Oruvanum Unnai
Parikkavidamaattaen
Theengku Seyya Oruvanum Unmael
Kai Potuvathillai-2
1. Kartthar Ennai Kaivittaar
Aandavar Maranthuvittaar
Enru Pulampi Sollukindra Seeyonae-2
Thaayaanaval Pillaikku Irangkaamal
Paalakanai Marappaalo
Aval Maranthu Ponaalum
Naan Unnai Marappathillai Seeyonae
Naan Unnai Veruppathillai Seeyonae
- En Seeyonae
2. Nirmoolamaakkinavar Paazhaakkinavarellaam
Unnai Vittu Purappata Seyvaen Seeyonae-2
Vanaanthiram Ellaamae Vayalveliyaay Maaritumae
Paazhaana Thaesamellaam Kutigalaalae Nirampitumae
Unnai Enrum Verutthidamaattaen Seeyonae-2
- En Seeyonae
3. Ezhumpu Ezhumpu Seeyonae
Vallamaiyai Tharitthukkol
Thoosiyai Udharivittu Ezhumpitu-2
Alangkaara Vasthiratthai Ututthikkol Seeyonae
Un Iraajaa Natuvinilae Eppothum Irukkaiyilae
Ini Nee Theengkai Kaanpathillaiyae-2
- En Seeyonae