பாடல் #417
ஆத்துமா கர்த்தரை
🔤 Aatthumaa Karttharai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே, என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே, - இதோ! நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுடபதந் தினம்பணிந்தே. - இதோ! - ஆத்துமா 1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை அனைவரும் பாக்கிய ளென்பாரே, முடிவில்லா மகிமை செய்தாரே - பல முடையவர் பரிசுத்தர் என்பாரே. - இதோ! - ஆத்துமா 2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார், - நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்; உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார், - தன்னை உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார். - இதோ! - ஆத்துமா 3.முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் - அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் நட்புடன் நினைவொடு நல்லிஸரேல் - அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல். - இதோ! - ஆத்துமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaa Karttharaith Thuthikkindrathae, Endran Aaviyum Avaril Kalikkindrathae, - Itho! Naertthiyaayp Paatuvaen, Nidhangganinthae Endhan Paartthiba Nudapathan Thinambaninthae. - Itho! - Aatthumaa 1.atimaiyin Thaazhmaiyaip Paartthaarae - Ennai Anaivarum Paakkiya Lenpaarae, Mutivillaa Makimai Seythaarae - Pala Mutaiyavar Parisutthar Enpaarae. - Itho! - Aatthumaa 2.payappatum Paktharuk Kirangkukiraar, - Narar Paartthida Perunjseyal Purikinraar; Uyartthitu Nararkalaich Sidharatippaar, - Thannai Ugandhavar Thaazhtthitil Uyartthukinraar. - Itho! - Aatthumaa 3.murpithaak Kalukkavar Sonnathupol - Andha Muniyaapi Raamuda Janamathanpaal Natpudan Ninaivotu Nallisarael - Avan Nalampera Aadharith Thaarmaravael. - Itho! - Aatthumaa