பாடல் #41472
பாடுபட்டு தேடி பணத்தை
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும் மானிடனே -2 கூடு விட்டு ஆவி போனால் கூட ஒன்றும் வருவதில்லை -2 1. பணமும் பதவியும் இரட்சிப்பது இல்லையே -2 இயேசு நாமமே இரட்சிக்கும் என்நாளுமே -2 2. தங்கமும் வைரமும் பரலோகில் சேர்க்காது -2 ஞானஸ்தானம் அபிஷேகம் பரலோகில் சேர்க்குமே -2 3. மதியற்று திரியாமல் தேவ சித்தம் அறிந்தவராய் -2 ஜெபித்திடும் உம்மையே பாக்கியவானாய் மாற்றுவார் -2 4. உலக வேஷம் மாற்றி விடு சஞ்சலத்தை தவிர்த்து விடு -2 பண ஆசை வெறுத்துவிடு எல்லா நன்மைகளும் உனதாகும் -2 5. பாவம் எல்லாம் அறிக்கையிடு மறுபடி பிறந்து விடு -2 மன்னவர் வரும்போதும் கிமையில் சேர்த்திடுவார் -2