பாடல் #41443
கண்விழிக்கும் பாலகா
🔤 Kanvizhikkum Paalakaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்விழிக்கும் பாலகா கடுங்குளிர் காலமா உன்னை தாலாட்ட சத்திரத்தில் ஒரு இடம் தரவில்லையா ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரராரோ நீ படைத்த உலகத்திலே உனக்கே இடம் தராத வஞ்சகமான மனிதருக்குள் வசிக்க வந்தாயோ நீ படைத்த மனிதனே உன்னை படை எடுக்க வருகிறானென்ற செய்தி கேட்டு கண் கலங்கி அழுகின்றாயோ என்ற செய்தி கேட்டு கண் கலங்கி அழுகின்றாயோ சாயலை இழந்தவரையும் சாபத்தால் இழந்தவரையும் மீட்பதற்காக தேடி வந்து சமீபமானாயோ சிலுவையில் ஒப்புக்கொடுத்து மறுபடியும் சாபத்தையே ஏற்றுக்கொள்ளும் மனிதனுக்காய் அழுகின்றாயோ சாபத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதனுக்காய் அழுகின்றாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanvizhikkum Paalakaa Katungkulir Kaalamaa Unnai Thaalaatta Satthiratthil Oru Idam Tharavillaiyaa Aariraro Aaraaro Aariraro Aariraro Aariraro Aaraaro Aarirararaaro Nee Pataittha Ulakatthilae Unakkae Idam Tharaadha Vanjjakamaana Manidharukkul Vasikka Vanthaayo Nee Pataittha Manidhanae Unnai Patai Etukka Varukiraanendra Seythi Kaettu Kan Kalangki Azhukinraayo Endra Seythi Kaettu Kan Kalangki Azhukinraayo Saayalai Izhandhavaraiyum Saabatthaal Izhandhavaraiyum Meetpatharkaaga Thaeti Vanthu Sameebamaanaayo Siluvaiyil Oppukkotutthu Marubatiyum Saabatthaiyae Aerrukkollum Manidhanukkaay Azhukinraayo Saabatthai Aerrukkollum Manidhanukkaay Azhukinraayo