பாடல் #41410
துரோகங்கள் சூழ்ந்திருக்கையில்
🔤 Thuroganggal Soozhnthirukkaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துரோகங்கள் சூழ்ந்திருக்கையில் என்னை காத்தவர் நீர்தானையா கண்ணீர் என் கண் மறைக்கையில் கரம் பிடித்தவர் நீர்தானையா நான் உடைந்தபோதெலாம் என்னை உருவாக்கினீர் நான் சோர்ந்தபோதெலாம் என்னை பெலப்படுத்தினீர் உம்மை ஆராதிப்பேன் - 4 சிங்கங்கள் சூழ்ந்திருக்கையில் பாதுகாத்தவர் நீர்தானையா நான் ஜெபித்த போதெல்லாம் என் கேடகமானீரே கிருபையை தந்தென்னை பிழைக்க செய்தீரே உம்மை ஆராதிப்பேன் -4 வாதைகள் சூழ்ந்திருக்கையில் வாழ வைத்தவர் நீர்தானையா பாதம் நழுவிய போதும் சற்றே தப்புவித்தீர் பிராண சேதமின்றி புதுவாழ்வை எனக்களித்தீர் உம்மை ஆராதிப்பேன் - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuroganggal Soozhnthirukkaiyil Ennai Kaatthavar Neerthaanaiyaa Kanneer En Kan Maraikkaiyil Karam Pititthavar Neerthaanaiyaa Naan Utaindhapothelaam Ennai Uruvaakkineer Naan Sorndhapothelaam Ennai Pelappatutthineer Ummai Aaraathippaen - 4 Singganggal Soozhnthirukkaiyil Paathukaatthavar Neerthaanaiyaa Naan Jepittha Pothellaam En Kaedakamaaneerae Kirupaiyai Thanthennai Pizhaikka Seytheerae Ummai Aaraathippaen -4 Vaathaigal Soozhnthirukkaiyil Vaazha Vaitthavar Neerthaanaiyaa Paadham Nazhuviya Pothum Sarrae Thappuvittheer Piraana Saedhaminri Puthuvaazhvai Enakkalittheer Ummai Aaraathippaen - 4