பாடல் #41353
பாவியை இரட்சிக்க
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
பாவியை இரட்சிக்க பரலோக தேவன் பூலோகம் வந்தாரே மண்ணான என்னையுமே மறுபடி பிறக்கச் செய்ய அந்த விண்ணுலகம் விட்டு மண்ணுலகில் வந்த மன்னவரே என் பாவத்தை மன்னித்திட என் மரணத்தை நீக்கிவிட அந்த விண்ணுலகம் விட்டு மண்ணுலகில் வந்த பரிசுத்தரே எத்தனாய் என்னையுமே உம் பக்தனாய் மாற்றிவிட அந்த விண்ணுலகம் விட்டு மண்ணுலகில் வந்த சத்தியமே மாட்டுத் தொழுவத்திலே அன்னை மடியினிலே என்னை பெற்றெடுக்க வந்த அன்னையாய் பிறந்த அற்புதமே சத்திர முன்னனையில் சரித்திர முன்னனியில் யூத பின்னனியில் வந்த பிதாவின் செல்லக் குமாரனே