பாடல் #41327
என் மேய்ப்பராய் கர்த்தர் இருக்க
🔤 En Maeypparaay Kartthar Irukka
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மேய்ப்பராய் கர்த்தர் இருக்க என் வாழ்வில் ஒன்றும் குறைவுகளில்லை நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை எனக்கு வேண்டியதெல்லாம் வேண்டும் நேரத்தில் வேளா வேளைக்குத் தருபவரே நான் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் எனக்கு தருகிறீர் என் உறவுகளெல்லாம் என்னை உதறும் நேரத்தில் எனக்கு உதிரமாக ( ஜீவனாக ) வந்தவரே உன்னை விட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லை என்று சொல்லி உறவாக வந்தவரே என் உயிரோடு கலந்தவரே என்னை பகைத்தவரெல்லாம் என் முகதரிசனத்தைத் தேடி வருகின்ற நாட்கள் வருகுதே என் முகவரி கண்டு - அதில் என் முகத்தைக் கண்டு தேடி வருகின்ற நாட்களைத் தருவீர் என்னை அழைத்தவரே கரம் பிடித்தவரே என்னை உயரத்தில் வைத்தவரே என் கால்களை மான் கால்களை போலாக்குவீர் என் தலையை உயர்த்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Maeypparaay Kartthar Irukka En Vaazhvil Onrum Kuraivugalillai Naan Thaazhchsi Enrum Ataivathillai Enakku Vaentiyathellaam Vaentum Naeratthil Vaelaa Vaelaikkuth Tharubavarae Naan Vaentuvatharkum Ninaippatharkum Migavum Athigamaay Enakku Tharukireer En Uravugalellaam Ennai Udharum Naeratthil Enakku Uthiramaaga ( Jeevanaaga ) Vandhavarae Unnai Vittu Vilakuvathillai Kaivituvathillai Enru Solli Uravaaga Vandhavarae En Uyirotu Kalandhavarae Ennai Pakaitthavarellaam En Mugatharisanatthaith Thaeti Varukindra Naatkal Varukuthae En Mugavari Kantu - Athil En Mugatthaik Kantu Thaeti Varukindra Naatkalaith Tharuveer Ennai Azhaitthavarae Karam Pititthavarae Ennai Uyaratthil Vaitthavarae En Kaalkalai Maan Kaalkalai Polaakkuveer En Thalaiyai Uyartthituveer