பாடல் #41307
உம் அன்பால் நிரப்பும் இயேசுவே
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
உம் அன்பால் நிரப்பும் இயேசுவே உம்மைப்போல் என்னை மாற்றிடுமே உண்மையான அன்பை ஊற்றி உம்மைப்போல நேசிக்கின்ற மன்னிக்கின்ற மனம் தாருமே சிலுவையிலும் மறக்கவில்லை சிறுமையிலும் மறக்கவில்லை சீர்கெட்ட போதும் நீர் வெறுக்கவில்லை உம் அன்பிற்கு அளவே இல்லை கள்வனென்று பார்க்கவில்லை காயங்களை நோக்கவில்லை பரலோகம் சேர்க்க நீர் மறுக்கவில்லை உம் அன்பிற்கு அளவே இல்லை