பாடல் #413
ஆதிசுதன் மானிடவதார மானார்
🔤 Aathisudhan Maanidavathaara Maanaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆதிசுதன் மானிடவதார மானார். அம்புவியை தமக்குறவதாக்கி கொண்டார். வாதையுறப்பாடு பட்டார் சிலுவை மீது மரித்தடக்கப்பட்டுயிர்த்தார் வான்போய் நின்றார். நீதியெல்லாம் நிறைவேற்றி முடித்தாரென்றும் நிலுவையில்லை வாழ்வனைத்துஞ் சம்பாதித்தார். பாதகர்க்கு பயமினியேன் ஆடிரூஞ்சல். பராபரனின் பிள்ளைகள் நீர் ஆடிரூஞ்சல். 2. உண்டான நன்மையெல்லாம் நமக்குண்டாச்சு. உம்பரமும் அம்பரமும் நமக்கென்றாச்சு. அண்ட சராசரங்களெல்லாம் நமக்கே சொந்தம். அனாதிசுதன் தானும் நமக்கருளப்பட்டார். கண்ட கண்ட சிஷ்டியெல்லாம் நமக்கல்லாமற் கடவுளுக்கே தேவை யென்ன கவைகாளென்ன? பண்டோரேமன்றி யறிந்தா உருஞ்சல். பராபரனின் பிள்ளைகள் நீர் ஆடிரூஞ்சல்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aathisudhan Maanidavathaara Maanaar. Ampuviyai Thamakkuravathaakki Kontaar. Vaathaiyurappaatu Pattaar Siluvai Meethu Maritthatakkappattuyirtthaar Vaanpoy Ninraar. Neethiyellaam Niraivaerri Mutitthaarenrum Niluvaiyillai Vaazhvanaitthunj Sampaathitthaar. Paadhakarkku Payaminiyaen Aatiroonjjal. Paraabaranin Pillaigal Neer Aatiroonjjal. 2. Untaana Nanmaiyellaam Namakkuntaachsu. Umbaramum Ambaramum Namakkenraachsu. Anda Saraasaranggalellaam Namakkae Sondham. Anaathisudhan Thaanum Namakkarulappattaar. Kanda Kanda Sishtiyellaam Namakkallaamar Katavulukkae Thaevai Yenna Kavaikaalenna? Pantoraemanri Yarinthaa Urunjjal. Paraabaranin Pillaigal Neer Aatiroonjjal.