பாடல் #41291
ஆராய்ந்து முடியாத அதிசயங்களை
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
ஆராய்ந்து முடியாத அதிசயங்களை செய்யும் கர்த்தர் நீர் என் வாழ்வில் முடியாத முடிவனைத்தையும் முடிக்கும் கர்த்தர் நீர் எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவர் நீர் இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர் 1. நடந்தவையெல்லாம் நன்மைக்குத்தானே இனி நடப்பதும் என் நன்மைக்கல்லவோ என் வாழ்வில் தீமை ஒன்றும் செய்யாதவர் தீமையை அனுமதிக்கக் கூடாதவர் நீர் செய்ததும் நன்மை செய்வதும் நன்மை எல்லாம் நன்மைகல்லவோ 2. தாமதமெல்லாம் நீர் தந்திடத்தானே-அதை தரணியெல்லாம் சொல்லிடத்தானே என் வாழ்வின் தாழ்விலிருந்து தூக்கி எடுத்தவர் என் வாழ்வில் வானவில்லை போலானவர் 3. தகுதியும் இல்லை எந்த வலிமையும் இல்லை நான் நிற்க நிலை இல்லாமற் போனேன் மனிதர்கள் மறந்தபோது எனை நினைத்தவர் ஆறுதல் அற்றபோது எனை அணைத்தவர்