பாடல் #41270
உம்மை துதிக்கிறோம் என் தேவனே
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
உம்மை துதிக்கிறோம் என் தேவனே உம்மை துதிக்கிறோம் என் இயேசுவே -2 உமது நாமம் அருகில் உள்ளது என்று -2 உமது அதிசய கிரியைகள் சொல்லுது -2 1. நியமிக்கப்பட்ட காலத்தில் வந்திடுவீர் யதார்த்தமாய் உலகை நியாயம் தீர்த்திடுவீர் 2. பூமியானது எல்லா குடிகளோடும் கரைந்து போய்விடும் தேவனின் நாளில் 3. வீம்பு காரரே வீம்பாய் பேசாதீர்கள் துன்மார்கரே உங்கள் கொம்பை உயர்த்தாதீர்கள் 4. சகல ஜனங்களே கொம்பை உயர்த்தாதீர்கள் இறுமாப்புள்ள கழுத்தாய் பேசாதீர்கள் 5. கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலும் ஜெயமும் வருவதில்லை வெற்றியும் கிடைப்பதில்லை 6. தேவனே நீதிபதி உயர்த்தவும் தாழ்த்தவும் தேவனால் ஆகுமே எல்லாமே ஆகுமே