பாடல் #41260
கர்த்தரையும் அவர் வசனத்தையும்
🔤 Karttharaiyum Avar Vasanatthaiyum
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரையும் அவர் வசனத்தையும்.. ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா... கர்த்தரையும் அவர் வசனத்தையும் ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2 1.வானமும் பூமியும் ஒழிந்து போகும் வார்த்தை ஒழியுமோ-2 பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ-2 ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே-2 கட்டளைகளும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும் 2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ-2 தங்கத்தை விட தேனையும் விட ஒசந்ததல்லவோ-2 ஆண்டவரின் வசனம் அதில் மனது மகிழுமே-2 கீழ்ப்படிஞ்சு நடந்தா என்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும் 3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே-2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே-2 பேதைகளுக்கெல்லாம் அது ஞானம் கொடுக்குமே-2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு விடுக்குமே-2-கர்த்தரையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaiyum Avar Vasanatthaiyum.. Rasippomaa Konjjam Rusippomaa... Karttharaiyum Avar Vasanatthaiyum Rasippomaa Konjjam Rusippomaa-2 1.vaanamum Poomiyum Ozhinthu Pokum Vaartthai Ozhiyumo-2 Pookkalum Ularum Pullum Azhiyum Vasanam Azhiyumo-2 Aandavarin Vasanam Athu Nilaitthu Ninritumae-2 Kattalaigalum Karpanaigalum Nitthiyam Nitthiyamae-2-karttharaiyum 2.kaalukku Theebam Paathaikku Veliccham Vasanamallavo-2 Thanggatthai Vida Thaenaiyum Vida Osandhathallavo-2 Aandavarin Vasanam Athil Manathu Makizhumae-2 Keezhppatinjsu Natanthaa Enrum Nanmai Nigazhumae-2-karttharaiyum 3.kurtranggal Illaa Kuraiyum Illaa Vasanap Putthakamae-2 Aatthumaavukku Iratsippai Tharum Pokkisha Pettakamae-2 Paethaigalukkellaam Athu Njaanam Kotukkumae-2 Satthiyatthai Virumpuvorkku Azhaippu Vitukkumae-2-karttharaiyum