பாடல் #41259
உம்மை பாடாமல் என்னால்
🔤 Ummai Paataamal Ennaal
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா – 2 அன்பு தெய்வமே நேச தெய்வமே – 2 இயேசையா என் இயேசையா எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே – 2 (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே – 2 1. மனுஷர் பாக்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே – 2 உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா – 2 2. ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் – 2 ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Paataamal Ennaal Irukka Mutiyaathaiyaa Ummai Thuthikkaama Irukka Ennaal Mutiyaathaiyaa – 2 Anpu Theyvamae Naesa Theyvamae – 2 Yesaiyaa En Yesaiyaa Elimaiyaanavan Sirumaiyaanavan Thanneerai Thaeti Thaagatthaalae Naavarantu Ponaenae Ennai Kanteerae En Thaagam Theerttheerae – 2 (ennai) Arpamaaga Ennaamal Aadharittheerae – 2 1. Manushar Paakkiravannamaay Neer Paarppathae Illai Patsapaadham Ethuvumae Ummidam Illai Yaaraiyum Neer Arpamaaga Paarppathae Illai Puzhuthiyilirundha Ennai Thookki Etuttheerae Pelaveenan Enru Paaraamal Anaitthukkonteerae – 2 Um Anpirku Eetu Inai Illaiyappaa Um Irakkattharku Mutivaethaan Illaiyappaa – 2 2. Aezhaigalin Pelanellaam Neerthaanaiyaa Eliyavanukku Thidan Ellaam Neerthaanaiyaa Sirumaippattavanin Nampikkaiyellaam Neerthaanaiyaa Thikkartra Pillaigalin Thakappan Neerae Ummai Nampukira Yaavaraiyum Neer Kaividavaemaatteer – 2 Oru Thaayai Pola Thaerrukindra Theyvam Neerae Thakappanai Pola Sumakkindra Theyvam Neerae – 2