பாடல் #41256
சர்வ வல்லவர் நீரே
🎙 Bro. ரீனுக்குமார் • 💿 கன்மலை
சர்வ வல்லவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே துதி கன மகிமையும் ஒருவருக்கே எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2 1.சேனைகளின் கர்த்தர் நீரே எனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2 உந்தன் நாமம் உயர்த்துவேன் உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 2.நம்பினோரை கைவிடீரே மறவாமல் என்றென்றும் காப்பீரே-2 இயேசு இராஜா வாழ்கவே என்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 3.வாழ்விலும் போற்றுவேன் தாழ்விலும் போற்றுவேன் பெலத்திலும் போற்றுவேன் பெலவீனத்தில் போற்றுவேன்-3 எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர்