பாடல் #41243
என் தகப்பன் என் நன்மைக்கே
🔤 En Thakappan En Nanmaikkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார் என் தகுதிகள் பார்க்காமல் உதவி செய்வார் தப்பிதங்கள் பாராமல் தகுதிகள் பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார் என் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்பேன் இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்பேன் நம் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்போம் இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்போம் 1. என் முன்னே சென்று எதிரியை அழிப்பவர் உமக்கே ஆராதனை எனக்காக எல்லா யுத்தங்களைச் செய்பவர் உமக்கே ஆராதனை நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார் 2. வறண்ட நிலங்களை வயல்வெளியாய் மாற்றிடுவீர் உமக்கே ஆராதனை அவாந்தர வெளிகளை நீரூற்றாய் மாற்றிடுவீர் உமக்கே ஆராதனை நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார் 3. உயர்ந்த மேடுகளை சமவெளியாய் மாற்றிடுவீர் உமக்கே ஆராதனை உலர்ந்த எலும்புகளை உயிரோடு எழுப்பிடுவீர் உமக்கே ஆராதனை சூழ்நிலைகள் பாராமல் சூழும் ஜனம் பாராமல் எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thakappan En Nanmaikkae Ellaam Seyvaar En Thakuthigal Paarkkaamal Udhavi Seyvaar Thappidhanggal Paaraamal Thakuthigal Paaraamal Enakkaay Yaavaiyum Seythu Mutitthaar En Thakappanai Uyartthiyae Aaraathippaen Yesu Raajanai Uyartthiyae Aaraathippaen Nam Thakappanai Uyartthiyae Aaraathippom Yesu Raajanai Uyartthiyae Aaraathippom 1. En Munnae Senru Ethiriyai Azhippavar Umakkae Aaraadhanai Enakkaaga Ellaa Yutthanggalaich Seypavar Umakkae Aaraadhanai Nanmaigal Paaraamal Kurtrangkurai Paaraamal Enakkaay Yaavaiyum Seythu Mutitthaar 2. Varanda Nilanggalai Vayalveliyaay Maarrituveer Umakkae Aaraadhanai Avaandhara Veligalai Neeroorraay Maarrituveer Umakkae Aaraadhanai Nanmaigal Paaraamal Kurtrangkurai Paaraamal Enakkaay Yaavaiyum Seythu Mutitthaar 3. Uyarndha Maetugalai Samaveliyaay Maarrituveer Umakkae Aaraadhanai Ularndha Elumpugalai Uyirotu Ezhuppituveer Umakkae Aaraadhanai Soozhnilaigal Paaraamal Soozhum Janam Paaraamal Enakkaay Yaavaiyum Seythu Mutitthaar