பாடல் #41219
புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்
🔤 Puthithaay Pirandha Mazhalaigal Naanggal
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள் வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள் - 2 தாய் தந்தை யாருமில்லையே பேசாமல் கண்ணீரும் காவியம் பாடுதே - 2 1. உணவும் உடையுமின்றி உறவும் உறக்கமின்றி உயிர்கள் நாங்கள் வாழ்கிறோம் - 2 உணர்வை புரிந்துகொள்ள யாருமில்லையே - இங்கு உதவி செய்யும் இதயமில்லையே - 2 2. தாய் பாலை ருசித்ததில்லை, தகப்பனை கண்டதில்லை - 2 யார் செய்த பாவமோ ஒன்றுமே புரியவில்லை - 2 கைப்பிடித்து விளையாட யாருமில்லையே - இங்கு கதறி அழ வழியுமில்லையே - 2 3. ஊரும் உலகமும் அனாதையாக்கிடுச்சு.. என் பேரை சொல்லி சிலர் பணமும் வாங்கியாச்சு - 2 தேகமெல்லாம் உருகி போகுதே எங்கள நேசித்திட யாருமில்லையா? - 2 புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள் வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள் - 2 எங்கள தேடி இயேசு அப்பா வந்தாங்க.. எங்க கண்ணீர தொடச்சு அள்ளியணச்சாங்க - 2 இந்த அப்பாவ போல யாருமில்லையே.. இயேசு அப்பா மட்டுமே எனக்கு போதுமே - 2 எங்க அப்பாவும் அம்மாவும் எல்லாமும் நீரே உங்க மார்பிலே... மடியிலே சாய்ந்திருப்பேனே.. - 2 உங்க மார்பிலே... மடியிலே சாய்ந்திருப்பேனே.. நான் சாய்ந்திருப்பேனே.. - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthithaay Pirandha Mazhalaigal Naanggal Vaerinri Mulaittha Payirkal Naanggal - 2 Thaay Thanthai Yaarumillaiyae Paesaamal Kanneerum Kaaviyam Paatuthae - 2 1. Unavum Utaiyuminri Uravum Urakkaminri Uyirkal Naanggal Vaazhkirom - 2 Unarvai Purinthukolla Yaarumillaiyae - Ingku Udhavi Seyyum Idhayamillaiyae - 2 2. Thaay Paalai Rusitthathillai, Thakappanai Kandathillai - 2 Yaar Seytha Paavamo Onrumae Puriyavillai - 2 Kaippititthu Vilaiyaada Yaarumillaiyae - Ingku Kathari Azha Vazhiyumillaiyae - 2 3. Oorum Ulakamum Anaathaiyaakkituchsu.. En Paerai Solli Silar Panamum Vaangkiyaachsu - 2 Thaegamellaam Uruki Pokuthae Enggala Naesitthida Yaarumillaiyaa? - 2 Puthithaay Pirandha Mazhalaigal Naanggal Vaerinri Mulaittha Payirkal Naanggal - 2 Enggala Thaeti Yesu Appaa Vanthaangga.. Engga Kanneera Thodachsu Alliyanachsaangga - 2 Indha Appaava Pola Yaarumillaiyae.. Yesu Appaa Mattumae Enakku Pothumae - 2 Engga Appaavum Ammaavum Ellaamum Neerae Ungga Maarpilae... Matiyilae Saaynthiruppaenae.. - 2 Ungga Maarpilae... Matiyilae Saaynthiruppaenae.. Naan Saaynthiruppaenae.. - 2