பாடல் #41218
என் ஏக்கம் விருப்பமெல்லாம்
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
என் ஏக்கம் விருப்பமெல்லாம் உம்மோடு இருப்பது தான் என் நினைவும் செயலுமெல்லாம் உம் சித்தம் செய்வது தான் வேரோடு இணைந்த மரத்தினைப்போல் உம்மோடு இணைந்திடனும் செடியோடு வாழ்ந்திடும் கொடியினைப்போல் உம்மோடு வாழ்ந்திடனும் என் பேச்சும் மூச்சுமும் நீர்தானே என் சொல்லும் செயலும் நீர்தானே குயவனின் கைதனில் களிமண் நான் உடைத்து உருவாக்குமே! வாழ்கின்ற வாழ்வு ஓரு முறைதான் உமக்காய் வாழனுமே எந்த பாடுகள் பாரங்கள் சூழ்ந்தாலும் உம் அன்பினை பிரிக்க கூடாதைய்யா