பாடல் #41217
ஜீவ தேவனை தினம் தொழுதிடுவோம்
🔤 Jeeva Devanai Thinam Thozhuthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தேவனை தினம் தொழுதிடுவோம் ஆவலுடன் அவர் அடியினைப் பணிவோம்- 2 ஆதியந்தமில்லா ஜோதி சொரூபனை - 2 மேதினியில் வந்த மேன்மை குமாரனை தீதில்லார் உள்ளத்திலிருந்திடும் அரூபனை -2 கோதில்லா தூயனை கீதங்களால் பாடி - ஜீவ விண்டலத்தோர் புகழ் வீரப்பிரதாபனை -2 மண்டலத்தோர் புகழும் மனுக்குலத் தீபனை தொண்டர்க்காய் வேண்டிடும் மெய்யனுதாபனை -2 கொண்டாடிப் போற்றுவோம் மண்டலாதிபனை கடல்மேல் நடந்தோனை காற்றைக் கடிந்தோனை -2 உடல்பிணி நீக்கி நல்லுபதேசம் செய்தோனை அடல்புரிந் தலகையின் ஆற்றல் அழித்தோனை -2 திடமனமுடனே நாம் தினம் தினம் தொழுவோம் இக்குவலயம்தனில் இன்னல் அடைந்தோனை -2 மக்கள் மகிமையுற மரணத்தை யேற்றோனை எக்குலத் தோர்க்கும் நல் ரக்ஷிப்பை ஈந்தோனை -2 அக்களிப்புடனே நாம் அனுதினம் பணிவோம் தீர்க்கர் முன் உரைத்திட்ட தெய்வவதாரனை -2 மூர்க்கர்கள் வதைத்திட்ட முடிவிலா வீரனை தூர்க்க நரகின்வழி ஒழித்திட்ட தீரனை -2 பார்க்கொண்ணா ஜோதியைப் பணிவுடன் வணங்குவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Devanai Thinam Thozhuthituvom Aavaludan Avar Atiyinaip Panivom- 2 Aathiyandhamillaa Jothi Soroobanai - 2 Maethiniyil Vandha Maenmai Kumaaranai Theethillaar Ullatthilirunthitum Aroobanai -2 Kothillaa Thooyanai Keedhanggalaal Paati - Jeeva Vindalatthor Pugazh Veerappirathaabanai -2 Mandalatthor Pugazhum Manukkulath Theebanai Thondarkkaay Vaentitum Meyyanuthaabanai -2 Kontaatip Porruvom Mandalaathibanai Katalmael Natanthonai Kaarraik Katinthonai -2 Udalpini Neekki Nallubathaesam Seythonai Adalpurin Thalakaiyin Aartral Azhitthonai -2 Thidamanamudanae Naam Thinam Thinam Thozhuvom Ikkuvalayamthanil Innal Atainthonai -2 Makkal Makimaiyura Maranatthai Yaerronai Ekkulath Thorkkum Nal Rakshippai Eenthonai -2 Akkalippudanae Naam Anuthinam Panivom Theerkkar Mun Uraitthitta Theyvavathaaranai -2 Moorkkarkal Vathaitthitta Mutivilaa Veeranai Thoorkka Narakinvazhi Ozhitthitta Theeranai -2 Paarkkonnaa Jothiyaip Panivudan Vanangkuvom