பாடல் #412
ஆத்தும ஆதாயம்
🔤 Aatthuma Aathaayam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்தும ஆதாயம் செங்குவோமே - இது ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால் ஆசீர்வாதம் பெறுவோம் சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன் தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில் ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில் அற்புதமான பலனை அடையலாம் பாழுலக முழுதையும் ஒருவன் சம் பாதித்துக் கொண்டாலும் - ஒரு நாளுமழியாத ஆத்துமத்தை அவன் நஷ்டப்படுத்தி விட்டால் ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க மட்டில்லா தேவசுதன் - வானை விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன் விட்டதும் விந்தைதானே துட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்க தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthuma Aathaayam Sengkuvomae - Ithu Aandavarkkup Piriyam Naamathinaal Aaseervaadham Peruvom Saatthiram Yaavum Therindha Kiristhaiyan Thanjjatthaip Perrunaamittha Maavaelaiyil Aatthiramaaga Muyarsi Seyvomaakil Arpudhamaana Palanai Ataiyalaam Paazhulaka Muzhuthaiyum Oruvan Sam Paathitthuk Kontaalum - Oru Naalumazhiyaadha Aatthumatthai Avan Nashtappatutthi Vittaal Aalunthuraiyava Naayirunthaalumae Atthaal Avanukku Laabamillai Yenru Aezhai Roobangkontu Njaalamathil Vandha Emperumaan Kiristhaesanru Sonnaarae Kettuppona Aatthumaakkalai Ratsikka Mattillaa Thaevasudhan - Vaanai Vittulakil Kanapaatu Pattu Jeevan Vittathum Vinthaithaanae Thuttai Yarutthiyi Naatthumatthai Meetka Thooyaparan Munnor Kinartrarukilae Ittamudan Seytha Iratsanya Vaelaiyai Indha Nimishamae Sinthaiyi Lenniyae