பாடல் #41183
கிறிஸ்மஸ் கொண்டாடும்
🔤 Kirismas Kontaatum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்மஸ் கொண்டாடும் கிறிஸ்தவர்களே இனி காலம் செல்லாது சிந்தை செய்யுங்களேன் அவர் வந்து ஈராயிரம் வருடம் போனதே அவரது நியாயதீர்ப்பு வரவிருக்கிறதே மனந்திரும்பு மனந்திரும்பு உன் கொண்டாட்டம் விடு மகிமைமேல மகிமையடைய மறுரூபம் நாடு செல்வமதைத் தேடும் உயர் செல்வாக்கை நாடும் இவ்வுலக சம்மந்தம் வேண்டாம் தோழா பொருளாசைக் கொண்டு வீண் பெருமையிலே வீழும் பரிதாப பேயின் வழி வேண்டாம் தோழி பெற்றோரே பெரியோரே நான் சொல்லுவத கவனியுங்க நீங்க படிக்கும் வேதத்தின் வழியில் குடும்பமாக வாழணுங்க வேதம் சொல்லிடா வாழ்க்கை பொய்யடா தேவ சித்தமே நம் வாழ்வின் மெய்யடா புரிந்து செயல்படுவோம் பக்குவமா தப்பி செல்லுவோம் மனந்திரும்பு மனந்திரும்பு உன் கொண்டாட்டம் விடு மகிமைமேல மகிமையடைய மறுரூபம் நாடு ஏற்ற தாழ்வு பார்க்கும் வீண் வேற்றுமைகள் வேண்டாம் சாதி பேதம் பார்பதிலே தெய்வம் இல்லை அன்பு ஒன்றே வேண்டும் இது கிறிஸ்துவின் உபதேசம் சாதி சமயம் கடந்து சென்று சேர்வோம் பரதேசம் சபையே தேவ ஜனமே சுதாரித்து செயல்படுங்க நமது வாழ்வின் செயலிலெல்லாம் தேவ நாமம் உயரணுங்க ஏற்ற தாழ்வெல்லாம் கிறிஸ்துவேயில்ல உலக வழியெல்லாம் திருசபைக்கு அழகல்ல உணர்ந்து தீர்மானிப்போம் தேவனுக்கே மகிமை செய்வோம் மனந்திரும்பு மனந்திரும்பு உன் கொண்டாட்டம் விடு மகிமைமேல மகிமையடைய மறுரூபம் நாடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirismas Kontaatum Kiristhavarkalae Ini Kaalam Sellaathu Sinthai Seyyunggalaen Avar Vanthu Eeraayiram Varudam Ponathae Avarathu Niyaayatheerppu Varavirukkirathae Mananthirumpu Mananthirumpu Un Kontaattam Vitu Makimaimaela Makimaiyataiya Maruroobam Naatu Selvamathaith Thaetum Uyar Selvaakkai Naatum Ivvulaka Sammandham Vaentaam Thozhaa Porulaasaik Kontu Veen Perumaiyilae Veezhum Parithaaba Paeyin Vazhi Vaentaam Thozhi Perrorae Periyorae Naan Solluvatha Kavaniyungga Neengga Patikkum Vaedhatthin Vazhiyil Kutumbamaaga Vaazhanungga Vaedham Sollitaa Vaazhkkai Poyyataa Thaeva Sitthamae Nam Vaazhvin Meyyataa Purinthu Seyalpatuvom Pakkuvamaa Thappi Selluvom Mananthirumpu Mananthirumpu Un Kontaattam Vitu Makimaimaela Makimaiyataiya Maruroobam Naatu Aertra Thaazhvu Paarkkum Veen Vaerrumaigal Vaentaam Saathi Paedham Paarpathilae Theyvam Illai Anpu Onrae Vaentum Ithu Kiristhuvin Ubathaesam Saathi Samayam Katanthu Senru Saervom Parathaesam Sapaiyae Thaeva Janamae Suthaaritthu Seyalpatungga Namathu Vaazhvin Seyalilellaam Thaeva Naamam Uyaranungga Aertra Thaazhvellaam Kiristhuvaeyilla Ulaka Vazhiyellaam Thirusapaikku Azhakalla Unarnthu Theermaanippom Devanukkae Makimai Seyvom Mananthirumpu Mananthirumpu Un Kontaattam Vitu Makimaimaela Makimaiyataiya Maruroobam Naatu