பாடல் #41172
கேட்டுக்குப் போகும் வழியோ
🔤 Kaettukkup Pokum Vazhiyo
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Dm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்டுக்குப் போகும் வழியோ விசாலம் நித்திய ஜீவ வழி இடுக்கம் தேவ இராஜ்ஜியம் நித்ய பேரின்பம் தேடிச் சென்றாலே கண்டடைவோம் 1. புரண்டோடும் வெள்ளங்களைப் போல புவி வாழ்க்கை புரண்டோடுதே இந்த வாழ்க்கை உள்ளவரை தான் இயேசுவின் கிருபை இரக்கம் பெற முடியும் 2. அதிகமாய் கடிந்து கொள்ளப் பட்டும் பிடரி கடினமானால் சடுதியில் நாசமடைவான் சகாயம் பரிவு ஒன்றும் பெற்றிடானே 3. பாவங்களை பாரமாக எண்ணி வருத்தப்படுவோர் யாருமே தீவிரமாய் இயேசுவண்டை வாரும் நிச்சயம் ஆறுதல் விடுதலை அளித்திடுவார் 4. பரலோக இராஜ்ஜியம் செல்ல பாவங்களை அறிக்கை செய்வாய் பரிசுத்தர்கள் வாழ்ந்திடும் இடமே என்றென்றும் நமக்கே கர்த்தரால் வரும் பலனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaettukkup Pokum Vazhiyo Visaalam Nitthiya Jeeva Vazhi Itukkam Thaeva Iraajjiyam Nithya Paerinbam Thaetich Senraalae Kandataivom 1. Purantotum Vellanggalaip Pola Puvi Vaazhkkai Purantotuthae Indha Vaazhkkai Ullavarai Thaan Yesuvin Kirupai Irakkam Pera Mutiyum 2. Athigamaay Katinthu Kollap Pattum Pidari Katinamaanaal Satuthiyil Naasamataivaan Sakaayam Parivu Onrum Perritaanae 3. Paavanggalai Paaramaaga Enni Varutthappatuvor Yaarumae Theeviramaay Yesuvantai Vaarum Nicchayam Aarudhal Vitudhalai Alitthituvaar 4. Paraloga Iraajjiyam Sella Paavanggalai Arikkai Seyvaay Parisuttharkal Vaazhnthitum Idamae Enrenrum Namakkae Karttharaal Varum Palanae