பாடல் #41133
கூடவே இருந்தவரே
🎙 கிறிஸ்தவ பாடல்
கூடவே இருந்தவரே என்னை தோள் மீது சுமந்தவரே - 2 என் தகப்பனே என் தந்தையே கைவிடா என் தெய்வமே - 2 நம்பினோர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை - நான் - 2 நான் கடந்து வந்த பாதைகளை ஒரு தரம் பின்னோக்கி பார்கின்றேன் - 2 உற்ற சிநேகிதன் (சிநேகிதி) மறந்த போதும் நீர் என்னை மறக்கவில்லை என்னை ஜீவனோடு மீட்டவரே எந்தன் இறுதியையும் தந்துவிட்டேன் - 2 வெறுத்த மனுஷனை நோக்குவதில்லை படைத்த உம்மையே நோக்கிடுவேன் - 2 இதுவரை கண்மணி போல் காத்தவரே என்னை உம்மிடம் ஒப்புவித்தேன் - 2 மாறும் மனித அன்பு வேண்டாமைய்யா நிலையான உம் அன்பே போதும்மைய்யா - 2