பாடல் #411
ஆத்தும அடைக்கலம்
🔤 Aatthuma Ataikkalam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆத்தும அடைக்கலம் அன்புள்ள யேசுவே, அய்யா, புகலிடம் தாரும் காற்றுப் பெருவெள்ளம்போல் சீற்றங் கொள்ளுது துன்பம், கைகொடுத் தெனை ஆற்ற வாரும். 2. நீரே என் நம்பிக்கை, நீரே என் தஞ்சம் நீசன் எனக்கு வேறார் அய்யா? சாரும் நிராயுதன் யான் போரில் விழாப்படித் தாங்கும் உன் மறைவினில், அய்யா. 3. நீதம் கெட்ட பாவியான், நீதி பரிசுத்தமும் நிறைந்த நீர் எனக்குத்ர வாதி பாதகத்தால் நிறைந்த பேதையான் கிருபை சத்தியம்.பரிபூரணம் உள்ளோர் நீர் ஜோதி. 4. எந்தப் பாவமும் மூடும் விந்தைக் கிருபை உண்டும்மில், என் பாவம் தீர்த்தருளும், கோவே! நொந்த எனை நீர் ஆற்றிச் சிந்தையைப் புதுப்பித்து நோக்கும் அதைத் துய்யதாய், தேவே. 5. ஜீவ ஊற்றே, உம்மில் யான் தெளிந்து குடிப்பேனாக தீராத தாகங்கள் தீரும் ஓவா நித்தியமட்டாகப் பாவி என் நெஞ்சில் ஊறும் உன்னத அன்பே யேசு, வாரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aatthuma Ataikkalam Anpulla Yaesuvae, Ayyaa, Pugalidam Thaarum Kaarrup Peruvellampol Seertrang Kolluthu Thunbam, Kaikotuth Thenai Aartra Vaarum. 2. Neerae En Nampikkai, Neerae En Thanjjam Neesan Enakku Vaeraar Ayyaa? Saarum Niraayudhan Yaan Poril Vizhaappatith Thaangkum Un Maraivinil, Ayyaa. 3. Needham Ketta Paaviyaan, Neethi Parisutthamum Niraindha Neer Enakkuthra Vaathi Paadhakatthaal Niraindha Paethaiyaan Kirupai Satthiyam.paripooranam Ullor Neer Jothi. 4. Endhap Paavamum Mootum Vinthaik Kirupai Untummil, En Paavam Theerttharulum, Kovae! Nondha Enai Neer Aarrich Sinthaiyaip Puthuppitthu Nokkum Athaith Thuyyathaay, Thaevae. 5. Jeeva Oorrae, Ummil Yaan Thelinthu Kutippaenaaga Theeraadha Thaaganggal Theerum Ovaa Nitthiyamattaagap Paavi En Nenjsil Oorum Unnatha Anpae Yaesu, Vaarum.