பாடல் #41069
தந்தையே மறப்பேனோ
🔤 Thanthaiyae Marappaeno
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தையே மறப்பேனோ நான் என்ன நேர்ந்தாலும் - தந்தையே மறப்பேனோ நான் பசி பட்டினி தாகம் என்னை நெருக்கிட்டாலும் -2 உம் அன்பை மறப்பேனோ உலகம் உள்ளளவும் நான் பெற்றோர் உற்றோர்கள் மற்ற பெந்துக்கள் கைவிட்டாலும் -2 உலகம் எதிர்த்து என்னை இகழ்ச்சியாய்ப் பேசிட்டாலும் மனுஷர் எல்லாராலும் நான் கைவிடப்பட்டாலும் -2 உலகினில் ஏகனாய் நான் அலைந்து திரிந்திட்டாலும் நின்திரு நாமத்திற்காய் சித்திர வதை வந்தாலும் -2 இரத்த சாட்சியின் மரணந்தான் வந்திட்டாலும் நின்திரு நாமத்திற்காய் நிந்தைகள் வந்திட்டாலும் -2 அவனியில் அவமானம் ஏராளம் வந்திட்டாலும் ஜெயில்தனில் அடைபட்டு சிறைவாசம் செய்திட்டாலும் -2 அங்கேயே அடிபட்டு மாண்டு மடிந்திட்டாலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaiyae Marappaeno Naan Enna Naernthaalum - Thanthaiyae Marappaeno Naan Pasi Pattini Thaagam Ennai Nerukkittaalum -2 Um Anpai Marappaeno Ulakam Ullalavum Naan Perror Urrorkal Martra Penthukkal Kaivittaalum -2 Ulakam Ethirtthu Ennai Igazhchsiyaayp Paesittaalum Manushar Ellaaraalum Naan Kaividappattaalum -2 Ulakinil Aeganaay Naan Alainthu Thirinthittaalum Ninthiru Naamatthirkaay Sitthira Vathai Vanthaalum -2 Rattha Saatsiyin Marananthaan Vanthittaalum Ninthiru Naamatthirkaay Ninthaigal Vanthittaalum -2 Avaniyil Avamaanam Aeraalam Vanthittaalum Jeyilthanil Ataibattu Siraivaasam Seythittaalum -2 Angkaeyae Atibattu Maantu Matinthittaalum