பாடல் #41065
இந்த ராத்திரி காலந்தன்னிலும்
🔤 Indha Raatthiri Kaalandhannilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இந்த ராத்திரி காலந்தன்னிலும் எந்தன் காவலன் இயேசுவே -2 சொந்தமாய் என்னை மீட்ட நாயகா சந்ததம் என்னைக் காக்கிறீர் -2 2. தூங்கிடாமலே காக்கும் நாயகன் தூயவர் எங்கள் இயேசுவே -2 ஏங்கிடாமலே இந்த ராத்திரி தாங்கியே என்அந்தக் காத்திடும் -2 3. தன்னந் தனித்த ஏழையான் உம்மை தரணியில் கெஞ்சி நிற்கிறேன் -2 சின்னம் சிறிய தாசனாம் என்னை மன்னன் இயேசுவே நோக்குவீர் -2 4. ஆறரண்டுபேர் சிறையின் மத்தியில் அரிய காவலன் இயேசுவே -2 அன்பன் பேதுரு ஆறுதல் பெற்ற அதிசயம் செய்த நாயனே -2 5.பாதி ராத்திரி பாடிப் போற்றவே பவுசளித்த என் இயேசுவே பாதி ராத்திரி நானும் பாடிட பவித்திரம் தந்து காத்திடும் -2 6.இந்த ராத்திரி உந்தன் மார்பினில் மைந்தன் யான் தூங்க அருள் செய்வீர் -2 நன்று காலையில் நான் விழித்து உம் தொண்டு செய்திட அருள் செய்வீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Indha Raatthiri Kaalandhannilum Endhan Kaavalan Yesuvae -2 Sondhamaay Ennai Meetta Naayakaa Sandhatham Ennaik Kaakkireer -2 2. Thoongkitaamalae Kaakkum Naayakan Thooyavar Enggal Yesuvae -2 Aengkitaamalae Indha Raatthiri Thaangkiyae Enandhak Kaatthitum -2 3. Thannan Thanittha Aezhaiyaan Ummai Tharaniyil Kenjsi Nirkiraen -2 Sinnam Siriya Thaasanaam Ennai Mannan Yesuvae Nokkuveer -2 4. Aararantupaer Siraiyin Matthiyil Ariya Kaavalan Yesuvae -2 Anban Paethuru Aarudhal Pertra Athisayam Seytha Naayanae -2 5.paathi Raatthiri Paatip Portravae Pavusalittha En Yesuvae Paathi Raatthiri Naanum Paatida Pavitthiram Thanthu Kaatthitum -2 6.indha Raatthiri Undhan Maarpinil Maindhan Yaan Thoongga Arul Seyveer -2 Nanru Kaalaiyil Naan Vizhitthu Um Thontu Seythida Arul Seyveer -2