பாடல் #41054
காலையில் ஸ்தோத்திரிப்பேன்
🔤 Kaalaiyil Sthotthirippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் ஸ்தோத்திரிப்பேன் என் நேசரே உம்மை சென்ற இரவினில் க்ஷேமமாய்க் காத்ததால் அதிகாலைதனில் உம்மை துதித்திடச் செய்ததால் 1. நித்திரை தன்னில் என்னை - பத்திரமாய்க் காத்தீர் நீசனாம் எந்தனைப் பாசமாய் இரட்சித்த நிர்மல நாதனே உம்திரு நாமத்தை 2. அதிசயமானவரே - அன்பாலே இரட்சித்த உம்சித்தம் செய்யவே நீர் என்னைத் தாங்கிட வைகறைப் பொழுதினில் வேண்டுதல் செய்கின்றேன் 3. வல்லமை தந்திடுவீர் - உம்மை நான் பின்செல்ல உம்திரு சாட்சியாய் உலகில் வாழ்ந்திட 2 உமது திருநாம மகிமைக்காய் வாழ்ந்திட 4. சாத்தானின் சோதனைகள் - அத்தனையும் வெல்ல கர்த்தனே உம்தனின் கரமதால் தாங்கிட எந்தனை படைக்கின்றேன் உம்திரு கரமதில் 5. அத்தனே உம்தனை - இலக்காக நோக்கியே அனுதினம் ஜீவிக்க அருள் செய்வீர் தேவனே ஆத்துமாக்கள் மீட்படைய அனுக்கிரகம் செய்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Sthotthirippaen En Naesarae Ummai Sendra Iravinil Kshaemamaayk Kaatthathaal Athikaalaidhanil Ummai Thuthitthidach Seythathaal 1. Nitthirai Thannil Ennai - Patthiramaayk Kaattheer Neesanaam Endhanaip Paasamaay Iratsittha Nirmala Naadhanae Umthiru Naamatthai 2. Athisayamaanavarae - Anpaalae Iratsittha Umsittham Seyyavae Neer Ennaith Thaangkida Vaigaraip Pozhuthinil Vaentudhal Seykinraen 3. Vallamai Thanthituveer - Ummai Naan Pinsella Umthiru Saatsiyaay Ulakil Vaazhnthida 2 Umathu Thirunaama Makimaikkaay Vaazhnthida 4. Saatthaanin Sodhanaigal - Atthanaiyum Vella Kartthanae Umthanin Karamathaal Thaangkida Endhanai Pataikkinraen Umthiru Karamathil 5. Atthanae Umthanai - Ilakkaaga Nokkiyae Anuthinam Jeevikka Arul Seyveer Devanae Aatthumaakkal Meetpataiya Anukkirakam Seythitum