பாடல் #41052
எந்தன் தேவா ஸ்தோத்திரம்
🔤 Endhan Thaevaa Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் தேவா ஸ்தோத்திரம் இந்தக் காலையைக் காணச் செய்ததால் 1. கடந்த ராத்திரி காலந்தன்னில் என்னை கருத்தாய்க் காத்தீரே செம்மையாய் என்னைச்சூழ இருந்து சுகத்துடன் காத்தீரே 2. நித்திரை செய்து தூங்கிடும் வேளை துணைவராய் நீர் இருந்து தூங்காமல் காத்தீர் துங்கவனே நீர் துன்பங்கள் அணுகிடாமல் 3.தூங்காமலும் உறங்காமலும் என்னை பாதுகாத்தீர் தூயரே தீமை அணுகாமல் திருக்கரத்தால் என்னை அரவணைத்தீர் தூயரே 4. ஐந்து காய அடைக்கலத்தில் வைத்து அன்புடன் காத்தீரே ஆறுதலுடனே நித்திரை செய்து விழித்திடச் செய்தீரே 5. அக்கினி மதிலும் கோட்டையுமாயிருந் தடியானைக் காத்தீரே ஆபத்து அணுகாமல் ஆசீர்வாதத்துடன் இந்நாளை ஈந்தீரே 6. சமாதானத்துடனே காலையைக் கண்டு களிகூரச் செய்தீரே நானிலத்தில் யான் நன்றியுடனே அல்லேலூயா பாடவே 7. பகல் முழுவதிலும் பத்திரமாக பாதுகாத்திடும் தேவா பரிசுத்த ஜீவியம் செய்து முன்னேற பலப்படுத்திடும் தேவா 8. ஸ்தோத்திரித்து உம்மை மகிமைப்படுத்த தூயரே அருள் புரிவீர் உண்மையுடனே உம்மைப் பின்செல்ல தேவா நீர் அருள் புரிவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Thaevaa Sthotthiram Indhak Kaalaiyaik Kaanach Seythathaal 1. Katandha Raatthiri Kaalandhannil Ennai Karutthaayk Kaattheerae Semmaiyaay Ennaichsoozha Irunthu Sugatthudan Kaattheerae 2. Nitthirai Seythu Thoongkitum Vaelai Thunaivaraay Neer Irunthu Thoongkaamal Kaattheer Thunggavanae Neer Thunbanggal Anukitaamal 3.thoongkaamalum Urangkaamalum Ennai Paathukaattheer Thooyarae Theemai Anukaamal Thirukkaratthaal Ennai Aravanaittheer Thooyarae 4. Ainthu Kaaya Ataikkalatthil Vaitthu Anpudan Kaattheerae Aarudhaludanae Nitthirai Seythu Vizhitthidach Seytheerae 5. Akkini Mathilum Kottaiyumaayirun Thatiyaanaik Kaattheerae Aabatthu Anukaamal Aaseervaadhatthudan Innaalai Eentheerae 6. Samaathaanatthudanae Kaalaiyaik Kantu Kalikoorach Seytheerae Naanilatthil Yaan Nanriyudanae Allaelooyaa Paadavae 7. Pakal Muzhuvathilum Patthiramaaga Paathukaatthitum Thaevaa Parisuttha Jeeviyam Seythu Munnaera Palappatutthitum Thaevaa 8. Sthotthiritthu Ummai Makimaippatuttha Thooyarae Arul Puriveer Unmaiyudanae Ummaip Pinsella Thaevaa Neer Arul Puriveer