பாடல் #41049
காலைதனில் களிப்புடனே
🔤 Kaalaidhanil Kalippudanae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலைதனில் களிப்புடனே கர்த்தரை ஸ்தோத்திரிப்போம் இக் காலைதனில் 1. சென்றதோர் இரவினில் க்ஷேஷமமுடன் காத்ததால் தோஷம் அணுகாமல் சுகம் பெலம் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போம் - 2 2. வாழ்வினில் வறட்சிகள் வந்திடாமல் காத்ததால் வாழ்நாளில் இந்நாளை கூட்டி நமக் கீந்ததால் ஸ்தோத்திரிப்போம் 3. நித்திரை தந்துமே நித்திய காவலாளராய் இரத்தத்திற்குள் வைத்துமே பரிசுத்தமாய்க் காத்ததால் ஸ்தோத்திரிப்போம் 4. அந்தகாரம் அணுகாமல் அருகில் இருந்து காத்ததால் ஐங்காயங்களில் அடைக்கலம் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போம் 5. சாத்தானின் சதிமோசம் யாதொன்றுமே அணுகாமல் தூங்கிடும் வேளையில் சூட்சமாகக் காத்ததால் ஸ்தோத்திரிப்போம் 6. ஆனந்தக் களிப்புடன் அதிகாலையில் விழித்துமே ஆனந்தமாய்க் கீதங்கள் பாடிடச் செய்ததால் ஸ்தோத்திரிப்போம் 7. சாத்தானின் தந்திரங்கள் யாவற்றையும் எதிர்த்திட சர்வாயுதவர்க்கத்தை தரித்து வெற்றி சிறந்திட ஸ்தோத்திரிப்போம் 8. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் கடந்த எல்லா நாளிலும் வெற்றி நமக்கீந்ததால் ஸ்தோத்திரிப்போம் 9. எந்நாளும் எந்நேரமும் வெற்றி தந்து காத்திட உண்மையுள்ள நம் பிதா உயிரோடிருப்பதால் ஸ்தோத்திரிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaidhanil Kalippudanae Karttharai Sthotthirippom Ik Kaalaidhanil 1. Sendrathor Iravinil Kshaeshamamudan Kaatthathaal Thosham Anukaamal Sugam Pelam Eendhathaal Sthotthirippom - 2 2. Vaazhvinil Varatsigal Vanthitaamal Kaatthathaal Vaazhnaalil Innaalai Kootti Namak Keendhathaal Sthotthirippom 3. Nitthirai Thanthumae Nitthiya Kaavalaalaraay Ratthatthirkul Vaitthumae Parisutthamaayk Kaatthathaal Sthotthirippom 4. Andhakaaram Anukaamal Arukil Irunthu Kaatthathaal Aingkaayanggalil Ataikkalam Eendhathaal Sthotthirippom 5. Saatthaanin Sathimosam Yaathonrumae Anukaamal Thoongkitum Vaelaiyil Sootsamaagak Kaatthathaal Sthotthirippom 6. Aanandhak Kalippudan Athikaalaiyil Vizhitthumae Aanandhamaayk Keedhanggal Paatidach Seythathaal Sthotthirippom 7. Saatthaanin Thanthiranggal Yaavarraiyum Ethirtthida Sarvaayudhavarkkatthai Tharitthu Verri Siranthida Sthotthirippom 8. Sthotthiram Sthotthiram Allaelooyaa Sthotthiram Katandha Ellaa Naalilum Verri Namakkeendhathaal Sthotthirippom 9. Ennaalum Ennaeramum Verri Thanthu Kaatthida Unmaiyulla Nam Pithaa Uyirotiruppathaal Sthotthirippom