பாடல் #41048
பரிசுத்தனாக்கிடும் பார்த்திபனே யான்
🔤 Parisutthanaakkitum Paartthibanae Yaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தனாக்கிடும் பார்த்திபனே யான் அதிசுத்தனாக நடந்திடவே பரிசுத்தமுள்ளோரே பரனைத் தரிசிப்பார் பரலோக ராஜ்ஜிய பிரவேசமடைவார் 1.திருரெத்தம் சிந்தினீர் தீயனெனை அதிசுத்தனாகவே ஆக்கிடவே பரிசுத்த ஆவியின் பலமதை ஈந்தே பரலோக பாதையில் பதித்திடும் மனதை 2. மாயஜடம் எனை மயக்கிடாமல் பேயின் வலை எனைப் பிடித்திடாமல் தீய லோகம் எனைத் தடுத்தழிக்காமல் தினம் தினம் கிருபையால் திடப்படுத்திடுவீர் 3. உம்மைப் போல் ஜீவித்து உத்தமனாக உம்மையே காண்பிக்க உலகத்துக்கு உம்திரு வசனத்தை ஊக்கமாய் உரைக்க உமது நல்ஆவியை ஊற்றிடும் நிறைவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthanaakkitum Paartthibanae Yaan Athisutthanaaga Natanthidavae Parisutthamullorae Paranaith Tharisippaar Paraloga Raajjiya Piravaesamataivaar 1.thirurettham Sinthineer Theeyanenai Athisutthanaagavae Aakkidavae Parisuttha Aaviyin Palamathai Eenthae Paraloga Paathaiyil Pathitthitum Manathai 2. Maayajatam Enai Mayakkitaamal Paeyin Valai Enaip Pititthitaamal Theeya Logam Enaith Thatutthazhikkaamal Thinam Thinam Kirupaiyaal Thidappatutthituveer 3. Ummaip Pol Jeevitthu Utthamanaaga Ummaiyae Kaanpikka Ulakatthukku Umthiru Vasanatthai Ookkamaay Uraikka Umathu Nalaaviyai Oorritum Niraivaay