பாடல் #41047
சத்திய வேத புத்தகமே
🔤 Satthiya Vaedha Putthakamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய வேத புத்தகமே நித்திய திரியேக கர்த்தன் அருளிச் செய்த 1. மத்தியஸ்தனைக் குற்றவாளிக்குக் காட்டும் வைத்தியனை நோயாளிக்குப் புகட்டும் இத்தரையோர்க்கொரு ரட்சிப்பை யூட்டும் இயேசு கிறிஸ்து நாமத்தைப் பாராட்டும் 2. ஆயிரமாயிரமான பொன் வெள்ளி அருமையைப் பார்க்கிலு மதிகம் விலையுள்ள தூயமறை உனக்கு ஒப்பாகச் சொல்ல தொல்லுலகில் ஒருநூலுண்டோ! அல்ல! 3. பிள்ளைகள் பெற்றோர்கள், புருஷர் மனைவிகள் பெலத்தோர் பெலவீனர் பேதைகள் ஞானிகள் செல்வ ரெளியோர்கள் தேசிகர் மன்னர்கள் ஜெகத்தி லனைவர்க்கும் ஜீவ வசனங்கள் 4. புத்தி போதகத்துக்குரிய நன்னூலே போதக ஆத்துமத்தின் போஜனப்பாலே பக்தி பரிவு நிறைப்பாச நீர்க்காலே பாவங்களைப் பிளக்க பாய்ந்திடும் வாளே 5. பாதைக்குரிய தீபமும் நீயாவாய் பரிதிக்கு மேற்படும் பலனைச் சொரிவாய் சோதனைகளை வெல்ல திடனைத் தருவாய் சுவிசேஷ மீந்து நீ தேற்றியே வருவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Vaedha Putthakamae Nitthiya Thiriyaega Kartthan Arulich Seytha 1. Matthiyasthanaik Kurtravaalikkuk Kaattum Vaitthiyanai Noyaalikkup Pugattum Ittharaiyorkkoru Ratsippai Yoottum Yesu Kiristhu Naamatthaip Paaraattum 2. Aayiramaayiramaana Pon Velli Arumaiyaip Paarkkilu Mathigam Vilaiyulla Thooyamarai Unakku Oppaagach Solla Thollulakil Orunoolunto! Alla! 3. Pillaigal Perrorkal, Purushar Manaivigal Pelatthor Pelaveenar Paethaigal Njaanigal Selva Reliyorkal Thaesigar Mannarkal Jegatthi Lanaivarkkum Jeeva Vasananggal 4. Putthi Podhakatthukkuriya Nannoolae Podhaka Aatthumatthin Pojanappaalae Pakthi Parivu Niraippaasa Neerkkaalae Paavanggalaip Pilakka Paaynthitum Vaalae 5. Paathaikkuriya Theebamum Neeyaavaay Parithikku Maerpatum Palanaich Sorivaay Sodhanaigalai Vella Thidanaith Tharuvaay Suvisaesha Meenthu Nee Thaerriyae Varuvaay