பாடல் #41045
கர்த்தரின் வசனத்தைக் கருத்துடன்
🔤 Karttharin Vasanatthaik Karutthudan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் வசனத்தைக் கருத்துடன் ஆராய்வோம் நித்திய ஜீவனுண்டே கர்த்தரை அறிவிக்கிறதே குற்றங் குறைகளற்ற வசனம் - அது ஆத்துமத்தை உயிர்ப்பிக்கும் சத்திய வேதம் சத்தியமாகும் புத்தியில்லா பேதையோனை ஞானியாக்கிடும் வானமும் பூமியும் அழியும் - அவை களிலுள்ள யாவுமே ஒழியும் வானவர் வேதம் அதிலொரு உறுப்பும் அழியவே அழியாது அன்பர்க்கு உணவாகும் பாவத்தின் சாபத்தை தீர்த்தார் - இயேசு பாரக் குருசினிலே மரித்தார் பாவியை மீட்டார். பரிந்து பேசுகிறார் ஆவி விசுவாசிக்கும் அன்பர்க் கெனவுரைக்கும் வேகமாய் மேகத்தில் வருவார் - நம்மை விருப்பமாய் அவரிடம் சேர்ப்பார். வேதனை தீர்ப்பார். வியாகுலம் தவிர்ப்பார் விண்ணில் நித்தியகாலம் கண்ணின் மணிபோல் காப்பார் இருதயப் பலகையில் எழுதி - அதை ஒருகணம் மறையாமல் கருதி இருந்திடும் போதும் எழுந்திடும் போதும் எப்போதும் எப்போதும் எண்ணி எண்ணிக் கருத்தாய் புத்திரர்க்கும் படித்துக் கொடுத்து - அதைக் காத்து நடக்கக் கற்றுக் கொடுத்து காலை மாலை வேளை தவறா தாத்துமப் பசிக் கெனப் புசித்து வசித்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Vasanatthaik Karutthudan Aaraayvom Nitthiya Jeevanuntae Karttharai Arivikkirathae Kurtrang Kuraigalartra Vasanam - Athu Aatthumatthai Uyirppikkum Satthiya Vaedham Satthiyamaakum Putthiyillaa Paethaiyonai Njaaniyaakkitum Vaanamum Poomiyum Azhiyum - Avai Kalilulla Yaavumae Ozhiyum Vaanavar Vaedham Athiloru Uruppum Azhiyavae Azhiyaathu Anbarkku Unavaakum Paavatthin Saabatthai Theertthaar - Yesu Paarak Kurusinilae Maritthaar Paaviyai Meettaar. Parinthu Paesukiraar Aavi Visuvaasikkum Anbark Kenavuraikkum Vaegamaay Maegatthil Varuvaar - Nammai Viruppamaay Avaridam Saerppaar. Vaedhanai Theerppaar. Viyaakulam Thavirppaar Vinnil Nitthiyakaalam Kannin Manipol Kaappaar Irudhayap Palakaiyil Ezhuthi - Athai Oruganam Maraiyaamal Karuthi Irunthitum Pothum Ezhunthitum Pothum Eppothum Eppothum Enni Ennik Karutthaay Putthirarkkum Patitthuk Kotutthu - Athaik Kaatthu Natakkak Karruk Kotutthu Kaalai Maalai Vaelai Thavaraa Thaatthumap Pasik Kenap Pusitthu Vasitthida