பாடல் #41044
எத்தனை இன்பமிது
🔤 Etthanai Inbamithu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எத்தனை இன்பமிது - ஏழை எனக்கெத்தனை இன்பமிது சத்திய வேத வினோத விசேஷங்கள் எத்தனை இன்பமிது 2. சத்துரு சேனைகளாம் - உலகுடல் சாத்தான்செய் தீமைகளில் பார்த்துப் படித்துத் தினமும் ஜெயம் பெறப் பாத்திரமானதிதே 3.பட்டினி தாகத்தையும் -பலவிதக் கட்டுகள் காவலையும் சட்டை செய்யாமல் சந்தோஷமடைந்திட சக்தியு மீந்திடுதே 4. துன்பம் பெருகிவிட்டால் - அன்பர் முகம் தூரமில்லை இன்பமொழிதரும் இங்கித வேதத்தில் எல்லா மதிசயமே யெனவே 5. தீய வழி நடந்து - சிறியன்யான் செய்த வினைகளெல்லாம் நேயமுடன் பொறுத்தாளுகிறாரென்று கூறும் நல்வேதமிதே 6. பாரம் மிகுந்தவரே - வாருமுங்கள் பாரமிறக்கிடுவேன் - 2 பாரச்சிலுவை சுமந்தேன் பாவம் தீர்த்தேன் பாரென்னும் வேதமிதே 7. ஆரும் சகாயமின்றி - அனாதையாய்த் தீரும் சமயத்திலும் வெறுக்கும் வேளையிலும் ஊரும் உற்றாரும் உற்ற துணையிதுவே 8. வீடு விட்டோடுகையில் - வேதமொன்று தேடியெடுத்துக் கொண்டால் காடும் மலையும் நல்வீடும் வெளிச்சமும் ஆகுமென் றோதுமிது 9. நித்திய வாழ்வு உண்டு - மோட்ச வீட்டில் நேசர் பலருமுண்டு ஸ்தோத்திரக் கீதங்கள் ஓசை கேட்டானந்தம் கொள்வோ மென்றோதுமிது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Etthanai Inbamithu - Aezhai Enakketthanai Inbamithu Satthiya Vaedha Vinodha Visaeshanggal Etthanai Inbamithu 2. Satthuru Saenaigalaam - Ulakudal Saatthaansey Theemaigalil Paartthup Patitthuth Thinamum Jeyam Perap Paatthiramaanathithae 3.pattini Thaagatthaiyum -palavidhak Kattugal Kaavalaiyum Sattai Seyyaamal Santhoshamatainthida Sakthiyu Meenthituthae 4. Thunbam Perukivittaal - Anbar Mugam Thooramillai Inbamozhidharum Ingkidha Vaedhatthil Ellaa Mathisayamae Yenavae 5. Theeya Vazhi Natanthu - Siriyanyaan Seytha Vinaigalellaam Naeyamudan Porutthaalukiraarenru Koorum Nalvaedhamithae 6. Paaram Mikundhavarae - Vaarumunggal Paaramirakkituvaen - 2 Paarachsiluvai Sumanthaen Paavam Theertthaen Paarennum Vaedhamithae 7. Aarum Sakaayaminri - Anaathaiyaayth Theerum Samayatthilum Verukkum Vaelaiyilum Oorum Urraarum Urtra Thunaiyithuvae 8. Veetu Vittotukaiyil - Vaedhamonru Thaetiyetutthuk Kontaal Kaatum Malaiyum Nalveetum Velicchamum Aakumen Rothumithu 9. Nitthiya Vaazhvu Untu - Motsa Veettil Naesar Palarumuntu Sthotthirak Keedhanggal Osai Kaettaanandham Kolvo Menrothumithu